பக்கம்:சூரப்புலி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 ஒளி படுவதல்ை எத்தனையோ வானவில் உண்டாகி அந்த இடத்தை ஒரு மாயலோகம்போல் செய்தன. சூரப்புலி அந்த வர்ணஜாலங்களேப் பார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டே நடந்தது. உச்சிவேளேயில் புறப்பட்ட துறவி இக்காட்சிகளேயெல்லாம் பார்த்துக்கொண்டே மெதுவாகச் சென்ருர். ஒரு மரப் பாலத்தின் வழியாகக் காளி கங்கையைக் கடந்து நேபாளப் பகுதியிலே பாதை செல்லுகிறது. அந்த வழியாகச் சென்று இரவு நேரத்திற்குள் காலபானி என்ற இடத்தை அவர் அடைந்தார். அந்த இடத்திலேயே குளிர் மிக அதிகமாகிவிட்டது. பக்கத்தில் இருந்த ஒரு குன்றின் ஒரு பகுதி பிலே காற்றுக்கு அடக்கமான பகுதியாகப் பார்த்து அங்குக் கொத்துமாக் கம்பளியை விரித்து அன்றிரவைத் துறவி கழித்தார். குரப்புலி அவருக்கும் பக்கத்திலேயே காவல்காரனப்போல எச்சரிக்கை பாகப் படுத்திருந்தது. அடுத்த நாள் கால் ஒன்பது மணிக்குத் துறவி அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். இனியொரு பெரிய ஏற்றம். அதில் ஏறி லிப்புத் தடாகக் கணவாயின் வழியாகச் செல்லவேண்டும். இந்த இடத்தில்தான் யாத்திரைக்காரர்களுக்குப் பெரிய சோதனை ஏற்படும். கணவாயின் உயரம் கடல் மட்டத்திற்கு மேலே 16,800 والإلكب . ஆதலால் எறுவது மிகவும் சிரமம் : மூச்சுத் திணறும். லிப்புத் தடாகக் கணவாய்தான் கபிலாய கிரிக்கு வாயில் போல அப்பகுதியிலே அமைந்திருக்கிறது. திபெத்திற்கும் இந்தியா வுக்கும் போக்குவரத்து நடக்கவும் இக்கணவாய்தான் உதவுகிறது. குளிர்காலத்திலே இது பனி மூடி உறைந்து கிடக்கும். அப்பொழுது போக்குவரத்தே தடைப்பட்டுவிடும். வெய்யிற் காலத்தில் பணி உருகுவதால் கணவாய் வழி திறக்கும். இக்காலத்திலும் அங்குத் திடீரென்று உறைபனி விழ ஆரம்பித்துவிடும். துறவி இரண்டு மூன்று மைல் நடப்பதற்குள் அன்று உறைபனி விழத் தொடங்கிவிட்டது. இலவம் பஞ்சுபோலக் காற்றில் மிதந்து வந்து பூமியில் படிகின்ற உறைபனியைச் சூரப்புலி ஆச்சரியத்தோடு பார்த்தது. அரை மணி நேரத்திற்குள் தரையெல்லாம் ஒரே வெளுப் பாக மாறிவிட்டது. சூரப்புலி உறைபனியை உற்றுக் கவனித்தது. மெதுவாக ஒரு சிறு துண்டை வாயில் கடித்தது. ஜில்லென்று குளிர்ச்சி அதன் வாய்க்குள்ளே பரவி நடுக்கிற்று. துறவி சிரித்தார் 'பால்கட்டி சாப்பிடுகிருயா ?” என்று வேடிக்கையாகக் கேட்டார். உறைந்த பனிக்கட்டிகளின்மீது கால் வைத்துச் சூரப்புலி துள்ளிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/104&oldid=840548" இலிருந்து மீள்விக்கப்பட்டது