பக்கம்:சூரப்புலி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 அடுத்த நாள் உச்சிவேளே வரையிலும் இருந்தார். தரைப் பகுதி பிலிருந்த உறைபனி அநேகமாகத் தண்ணிராக மாறிவிட்டது. துறவியும் புறப்பட்டார். மேலே ஏற ஏற எங்கும் பனிப்பிரதேசமாகவே மாறிவிட்டது. ஒரே வெண்மை ; ஒரே பனிப்பாறை. இறுகியிருப்பதால் அதன் மேல் நடக்க முடிகிறது. சில சமயங்களில் பனிப்படலம் கனமாக இல்லாத இடத்தில் கால் அதில் அமிழ்கிறது. கையில் உள்ள ஊன்றுகோல் பேருதவியாக இருந்தது. சென்னேயிலே ஒரே நீல நிறமான பெரிய நீர்ப்பரப்பைச் சூரப்புலி கண்டது. இங்கே வெண்மை நிறமான பெரிய பனிப்பரப்பைக் காணலாயிற்று. கணவாயின் உச்சியிலிருந்து இறக்கம். அதில் 12 மைல் நடந்து துறவி தக்களக்கோட்டையை அடைந்தார். தக்களக்கோட்டை அந்தப் பகுதியிலே உள்ள பெரிய ஊர். அது 14000 அடி உயரத்தில் இருக்கிறது. அங்கே ஒரு மலேயுச்சி பில் ஒரு பெரிய பெளத்த மடம் உண்டு. துறவி அந்த ஊருக்குள் செல்லாமல் யாத்திரையைத் தொடர்ந்து மேற்கொண்டார். சில இடங்களிலே மண் தரையிலே நடப்பதுபோலிருக்கும். ஆல்ை அதன் அடியிலே பாறையாகப் பனிப்படலம் படிந்திருக்கும். உயர்ந்த பகுதிகளிலே வெள்ளை வெளேரென்று கண்ணப் பறிக்கும் படியாக உறைபனி காட்சியளிக்கும். இடையிடையே சிறிய ஆறுகள் குறுக்கிட்டன. ஆழமதிக மில்லாவிட்டாலும் பனிக்கட்டியைப் போலவே குளிர்ந்திருக்கும்; பனி உருகி வருவதால் அவ்வளவு குளிர்ச்சி ; வேகமும் அதிகமாக இருக்கும். கற்களே அடுக்கிச் சிலவற்றிற்குப் பாலம் போல அமைத்திருந்தார்கள். சிலவற்றிற்கு அத்தகைய ஏற்பாடு இல்லே . துறவி விளையாட்டுப்போல அவற்றையெல்லாம் கடந்து நடந்தார். குரப்புலிதான் ஒவ்வொரு தடவையும் முன்னல் செல்லும். ஆற்றின் ஆழத்தையும் தெரிந்துகொள்வதற்கு அது உதவும். அதுவே நீந்திப் போகவேண்டி யிருந்தால் துறவி எச்சரிக்கையாகச் செல்லுவார். அடுத்த கரைக்குச் சென்றதும் மரத்துப்போன கால் களில் சூடேறுவதற்காகக் குதிப்பார். சூரப்புலியும் குதிக்கும். ஓரிடத்திலே டுர்லா ஆற்றின் கிளே நதியொன்றைக் கடக்க வேண்டியிருந்தது. பாலம் எதுவும் இல்லை. அதன் ஆழம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/106&oldid=840550" இலிருந்து மீள்விக்கப்பட்டது