பக்கம்:சூரப்புலி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 படியாகச் செப்தார். பிறகு கயிற்றை இழுத்துப் பார்த்தார். பாறைத் தூணிலே சுற்றப்பட்டிருப்பதால் அது தளர்ந்து கொடுக்காமல் வலுவாக இருந்தது. துறவி மூட்டையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒரு கையால் கயிற்றைப் பிடித்துக்கொண்டும் மற்ருெரு கையால் ஊன்றுகோலே ஊன்றிக்கொண்டும் ஆற்றில் இறங்கி நடந்தார். இவ்விதமாக ஆற்றின் இழுப்பைச் சமாளித்துக்கொண்டு மூட்டை கொஞ்சமும் நனயாமல் துறவி அக்கரை சேர்ந்துவிட்டார். அங்கிருந்து மறுபடியும் ஒரு பெரிய எற்றம். பனிப்பாறைகள் நிறைந்த பகுதியிலே துறவி சிரமப்பட்டு எறி கெளரி குகைகளே அடைந்தார். அன்றைய இரவை அங்கேயே கழிப்பதாகத் தீர்மானித்தார். அந்தப் பகுதி கடல் மட்டத்திற்குமேல் பதிருை பிரத்து இருநூறடி உயரத்தில் உள்ளது, குளிர் மிகுந்தது. அங்குக் கிடந்த காப்ந்த கவரிமாட்டுச் சாணத்தைப் பொறுக்கி வந்து குகைக்குள் நெருப்பு மூட்டித் துறவி கோதுமை மாவைக்கொண்டு சப்பாத்திகள் தயாரித்தார். அவ்வாறு தயாரித்த உணவை உட்கொண்டு சூரப்புலிக்கும் அளித்தார். வரண்ட சாணத்தை நெருப்பிலே ப்ோட்டுவிட்டுப் படுத்துறங்கத் தயார் செய்துகொண்டிருந்தார். அந்தச் சமயத்திலே எங்கிருந்தோ நான்கு முரடர்கள் கத்தியும் கையுமாகக் குகைக் குள்ளே நுழைந்தார்கள். அவர்கள்ப் பார்த்ததும் துறவி நிலமையைப் புரிந்துகொண்டார். அவர் முகத்திலே ஒரு புன்னகை அரும்பியது. வந்தவர்களேச் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு குரப்புலி உருமிக்கொண்டு எழுந்தது. துறவி அதைத் தட்டிக் கொடுத்துப் பேசாமல் படுக்கும்படி செப்தார். வந்தவர்கள் திபெத்துப் பகுதியிலே திரியும் கொள்ளக்காரர் கள். துறவி தனியாக பாத்திரை செய்வதைத் தெரிந்துகொண்டு வந்திருக்கிருர்கள். இருப்பதையெல்லாம் பேசாமல் கொடுத்துவிடும் புடி பயங்காட்டினர்கள். 'இல்லாவிட்டால் இதோ இந்தக் கத்தி தான் : பார்த்துக்கொள்' என்று கொடுமை நிறைந்த குரலிலே சத்தமாகச் சொன்னர்கள். எல்லாவற்றையும் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்' என்று சிரித்துக்கொண்டே துறவி பதில் சொன்னர். ஒருவன் மூட்டையைத் தூக்கிக்கொண்டான். ஒருவன் மேலங்கியைச் சோதித்தான் : பணப்பையை எடுத்துக்கொண்டான். "அது போதுமா ? கம்பளி உடையெல்லாம் வேண்டாமா ?” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/108&oldid=840552" இலிருந்து மீள்விக்கப்பட்டது