பக்கம்:சூரப்புலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேட்டுப்பாளையத்து வீதிகளிலே முன்பு இப்படித் திரிந்த போது அது மிகச்சிறிய குட்டி. ஆல்ை இப்பொழுது அது வளர்ந்து விட்டது. இருந்தாலும், அது இன்னும் இளமைப் பருவத்தைக் கடக்கவில்லை. பாக்கு வியாபாரியின் மாளிகையிலே ஒரு வேல் உண்டும், ஒரு வேண் உண்ணுமலும் அது காலங்கழித்ததால் இயல்பாக வளரவேண்டிய அளவிற்கு அது வளரவில்லை. உடம்பில் சதைப்பற்று இல்லேயென்றே சொல்லவேண்டும். எங்குப் போவ தென்று தெரியாமல் அது மூன்று நாட்கள் அலேந்துவிட்டு, மூன்ரும் நாள் இரவு தொடங்கும் வேளையில் ஒரு உருளைக்கிழங்கு மண்டி எதிரே வந்து நின்றது. அந்த மண்டியை இரவிலே காவல் காக்கும் இரண்டு பேர் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்கள். அவர் களுக்குப் பக்கத்தில் தயங்கித் தயங்கிச் சூரப்புலி சென்றது. வால்க் குழைத்துக் குழைத்துக்காட்டியது. அன்போடு கூப்பிட்டால் அவர் களுக்கு உதவியாக இருப்பதற்குத் தயாராக இருப்பதைத் தெரிவித்துக்கொண்டது. ஆல்ை காவல்காரர்கள் அதைக் கவனிப்ப தாகத் தோன்றவில்லை. வெற்றிலேயில் சுண்ணும்பு தடவி மடித்து மடித்து வாயில் போட்டுக்கொண்டு, ஏதேதோ பேசிக்கொண்டிருந் தார்கள். அந்த மண்டியிலே உருளைக்கிழங்கு திருட்டுப்போவதைப் பற்றியும் பேசிக்கொண்டார்கன். நீலகிரி மலையின் மேல்பகுதியிலே உருளைக்கிழங்குகள் எராளமாக விளைகின்றன. அவற்றை மேட்டுப்பாளையத்திற்குக் கொண்டுவந்து, கடைகளிலே வைத்து, வெளியூர் வியாபாரிகளுக்கு விற்பார்கள். அப்படி விற்கும் மண்டிகள் பல உண்டு. அவற்றில் ஒன்று இது. இந்த உருளைக்கிழங்கு மண்டியிலே அடிக்கடி திருட்டுப் போப்க்கொண்டிருந்தது. அதைப்பற்றித்தான் காவல்காரர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் இரண்டு பேரும் புதிதாக நியமிக்கப்பட்டவர்கள். முன்பு காவல் காத்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவில்லேயென்று அவர்களே நீக்கிவிட்டு, ஒரு வாரத்திற்கு முன்புதான் இவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனல் இவர் களும் காவல் காப்பதிலே கெட்டிக்காரர்களல்ல ; தூக்கத்திலேதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/11&oldid=840554" இலிருந்து மீள்விக்கப்பட்டது