பக்கம்:சூரப்புலி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 லிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள உடைகூட இல்லாமல் பறித் துக்கொண்டதை எண்ணிச் சூரப்புலி உள்ளம் கொதித்தது. மிருகங்களேவிட மனிதன் கொடுமை மிகுந்தவன் என்று அதற்குத் தோன்றியது. இவ்வாறு அந்த நாளும் கழிந்தது. அடுத்த நாள் காலேயிலே சூரப்புலி தியானத்தில் அமர்ந் திருக்கும் துறவியின் பக்கத்திலே சென்றது. அவருடைய துடை பின்மீது தனது முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் படுத்தது. துறவியின் வலது கை அதை மெதுவாகத் தடவிற்று. சூரப்புலியின் பார்வை குகைக்கு வெளியே பனிப்பரப்பிலே ஒடிக்கொண்டிருந்த ஒரு வெள்ளே முயலின்மேல் விழுந்தது. திடீரென்று அதற்கு ஒரு புதிய எண்ணம் தோன்றிற்று. உடனே அது வேகமாகப் பாய்ந்து வெளியேறிற்று. அடுத்த கணத்திலே அது அந்த வெள்ளே முயலேத் தன் வாயில் கல்விக்கொண்டு குகைக்குள் நுழைந்தது. துறவியின் முன்னல் அந்த முயலே வைத்துவிட்டு ஆவலோடு அவரைப் பார்த்தது. பனிப்பிரதேசத்திலே இமாலயக் குழிமுயல்கள் நிறைய உண்டு. அவற்றைப் பிடித்து வந்தால் துறவியின் பசியைப் போக்க முடியும் என்று சூரப்புலிக்குத் திடீரென்று தோன்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/111&oldid=840556" இலிருந்து மீள்விக்கப்பட்டது