பக்கம்:சூரப்புலி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 1 0 விட்டு வந்துவிடுவேன்' என்று சொல்லிக்கொண்டே துறவி நடந்தார். 'அதற்கு வழியே இல்லை; நான் தப்பொன்றும் செய்ய வில்லே' என்று சொல்லுவதைப்போல முகத்தை உயர்த்தி வைத்துக்கொண்டு சூரப்புலி நடந்தது. பனிப்பாறைகள் தரையிலே அடர்த்தியாக இருந்த பகுதியிலே திருடர்கள் மூன்று பேரும் வெவ்வேறு இடங்களில் இறந்துகிடந்தார்கள். துறவி சந்தேகத்தோடு சூ ர ப் பு லி ைய உற்றுப் பார்த்தார். அவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் தான் அல்ல என்பது போல அது நடந்துகொண்டது. அங்கே கிடக்கும் கவரிமாட்டின் சாணத்தையும் தரையில் பல இடங்களில் தாறுமாருகப் பதிந்திருக்கும் கவரிமாட்டு அடிச் சுவடிகளேயும் காண்பித்தது. அந்தப் பகுதியிலே யதேச்சையாகத் திரியும் காட்டுக் கவரிமாடுகள் திருடர்களைத் திடீரென்று தாக்கியிருக்க வேண்டும் என்று துறவிக்குத் தோன்றிற்று. இறந்து கிடக்கும் திருடர்களே ஒவ்வொருவராக அவர் கவனித்தார். மார்பிலே கொம்பு பாய்ந்து ஒருவன் உடனே இறந்திருக்கிருன். மற்ருெருவனுக்கு மேலெல்லாம் காயமிருந்தது. அவன் கவரிமாட்டோடு நெடுநேரம் போராடிப் பிறகு இறந்திருக்கிருன் என்று தெரிந்தது. மற்ருெருவனுக்கு உடம்பில் காயமே.இல்:ைஎலும்பு முரிந்ததாகவும் தெரியவில்லை. ஆனல்அவனும் மாண்டு கிடந்தான். கவரிமாடு தாக்கியதால் ஒருவேளே அவன் மூர்ச்சையுற்று உறைபனியிலே விழுந்திருக்க வேண்டும் . அவன் மூர்ச்சை தெளிவதற்குள் அன்றிரவு பெய்த உறைபனி அவனே மூடியிருக்கவேண்டும். அதல்ை அவன் விறைத்துப் போப் மாண்டிருக்க வேண்டும். துறவி அத்திருடர்களுக்காக வருத்தப்படுவதைக் கண்டு சூரப்புலி ஆச்சரியமடைந்தது. துறவியின் கண்களில் வழிந்த கண்ணிரைக் கண்டு அவருடைய அளவு கடந்த அன்பை நன்ருக உணர்ந்து சூரப்புலியும் உள்ளம் கனிந்தது. அதனிடத்திலே இருந்த விலங்குணர்ச்சியெல்லாம் அடியோடு அந்த நிமிஷத்திலேயே மறைந்து போனதாகத் தோன்றிற்று. துறவி கயிலாய கிரி இருக்கும் திக்கை நோக்கி நின்று பிரார்த்தனே செய்துகொண்டிருந்தார். திருடர்களுக்காகத்தான் அவர் கடவுக்ாப்பிரார்த்திருக்கிருர் என்று சூரப்புலிக்குத் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/113&oldid=840559" இலிருந்து மீள்விக்கப்பட்டது