பக்கம்:சூரப்புலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 11 நெடுநேரம் இவ்வாறு பிரார்த்தனே செய்த துறவி பிறகு மெதுவாக நடக்கலானர். தமக்குச் சொந்தமான உடைகளும் உணவுப் பொருள்கள் அடங்கிய டப்பாக்களும் அங்கே சிதறிக் கிடந்தன. அவற்றையெல்லாம் சேர்த்து மறுபடியும் மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்பட்டார். சூரப்புலி மகிழ்ச்சியோடு அவரைப் பின்தொடர்ந்தது. பனி உருகி ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறிய ஓடையை அடைந்ததும் அங்கே இருந்த ஒரு பாறையின்மீது துறவி கம்பளித்துணிகளையெல்லாம் உலர்த்துவதற்காக விரித்துப்போட்டார். அங்கே டாமாச் செடிகள் நிறைய வளர்ந்திருந்தன, அவற்றில் சில வற்றைப் பிடுங்கி வந்து, நெருப்பு மூட்டி, நெருப்பிலே அவற்றைப் போட்டார். பச்சையாக இருந்த செடிகள் உடனே தீப்பற்றி எரிந் தன. சூரப்புலிக்கு அதுவும் ஆச்சரியமாக இருந்தது. உறைபனி பெப்யும் குளிர்ப்பகுதியிலே இப்படி ஒரு செடி உண்டாவதைத் துறவி முன்பே அறிந்திருக்கிருர் என்று சூரப்புலி கண்டுகொண்டது. தகர டப்பாவில் இருந்த கோதுமை மாவைக்கொண்டு துறவி சப்பாத்தி தயாரித்தார். இரண்டு நாட்களாகப் பட்டினியாகக் கிடந்த குரப்புலிக்கு அது ஒரு பெரிய விருந்தாக இருந்தது. தன்னுடைய பசி ஆறியதால் அடைந்த மகிழ்ச்சியைவிடத் துறவிக்கு உணவு கிடைத்ததை நினைத்தே பெரிதும் மகிழ்ச்சியடைந்தது. மேலும் இரண்டு நாட்கள் பனிப்பிரதேசத்திலேயே நடந்து துறவி தீர்த்தாபுரியை அடைந்தார். தீர்த்தாபுரியிலே அதிசியமான ஊற்று ஒன்று இருக்கிறது. உறைபனிப் பிரதேசமான அங்கே ஓர் உஷ்ண நீருற்று குமிழியிட்டு மேலே பொங்குகிறது. அது புறப்படும் இடத்திலே நீரில் கை வைக்க முடியாது. அவ்வளவு சூடு. ஆனால் ஊற்று நீர் ஓட ஓடக் குளிர்ச்சி படைகிறது. உடம்புக்கு இதமாக இருக்கும் பகுதியாகப் பார்த்து, துறவி அதில் குளித்தார். சூரப்புலியும் அதில் மூழ்கிக் களித்தது. வெப்ப மான நீரில் குளிப்பது அதற்கு இதுதான் முதல் அனுபவம். இருந்தாலும் உறைபனி மேலேயே பல மைல்கள் நடந்து வந்த அதற்கு இந்த அனுபவம் வரவேற்கத் தக்கதாகவே இருந்தது. பக்கத்திலே ஒரு பெளத்த மடம் உண்டு. அங்குள்ள சாதுக்கள் துறவியை அன்போடு வரவேற்ருர்கள். துறவி அங்கு ஒரு நாள் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/114&oldid=840560" இலிருந்து மீள்விக்கப்பட்டது