பக்கம்:சூரப்புலி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 உலகத்தையே முற்றிலும் மறக்கத் தொடங்கினர். தமது உடலையும் மறந்த்ார். அவருடைய தெய்வ உணர்ச்சி சூரப்புலி யையும் தாக்கிற்று. ஒரு துளக்குக்கூடையிலே உணவுப் பொருள்களே வைத்து பெளத்த மடத்துச் சந்நியாசிகள் கொடுத்திருந்தார்கள். அக்கூடையை வாயில் கவ்விக்கொண்டு சூரப்புலி நடந்தது. இடையிடையே துறவியின் முகத்தை அது உற்றுப் பார்க்கும். அந்த முகத்திலே தவழும் தெய்வ ஒளியிலே அது மெப் மறக்கும். இவ்வாறு இரண்டு நாள் நடந்து துறவி கயிலாயகிரியின் வடக்கு முகத்தை அணுகினர். விசுவலிங்கம் மத்தியிலே ஜோதி மயமாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. அதற்கு இரண்டு மைல் களுக்கு அப்பால் துவாரபாலகர்களைப்போல இரண்டு மல்கள் இங்கி நின்றிருந்தன. அந்த மலைகளுக்கு வெளிப்பக்கத்திலேயே தான் சாதாரணமாகப் பி ர த ட் சி ண ம் செய்பவர்கள் சுற்றி வருவார்கள். ஆனால், துறவி அம்மலையின் உட்பகுதியிலே வலக்கைப் பக்கத்தில் இருந்த குகைபோன்ற பகுதியில் சென்று தங்கினர். சாதாரணமாக யாரும் அங்குச் செல்வதில்லை. அங்கிருந்து சதா விசுவலிங்கத்தின் காட்சியைக் கண்டு களிக்க முடியும். குகைக்குள் அமர்ந்த துறவி இறைவனேயே நினைத்துத் கியானத்தில் இருந்தார். இடையிடையே அவரையும் அறியாது அவர் வாயிலிருந்து ஓம் ஓம் என்ற ஒலியெழும். அவருக்குப் பக்கத்திலே படுத்திருந்த சூரப்புலி அந்த ஒலியைக் கேட்டுப் பரவசமடையும். திடீரென்று காற்று வேகமாக அடிக்கும்பொழுது ஓம் ஓம் என்ற ஒலி எங்கிருந்தோ கேட்கும். அந்த ஒலியும் சூரப் புலியைப் பரவசப்படுத்தும். இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை துறவிக்கு உணவைப்பற்றிய நினைவு எழும். சூரப்புலியை எண்ணித்தான் அவர் உணவுக்கூடையை எடுப்பாரோ என்றுகூடச் சந்தேகப் படும்படியாக இருக்கும். இவ்வாறு எட்டு நாட்கள் கழிந்தன. அந்த நாட்களிலே சூரப்புலி உயர்ந்த வாழ்க்கைக்கு ஏற்றவாறு பக்குவமடைந்துகொண்டே வந்தது. அதன் விலங்குணர்ச்சிகள் மறைந்தன. சூரப்புலி தனது பழைய வாழ்க்கையைப்பற்றி யெல்லாம் நினத்துப் பார்க்கும். அது தவருக எந்தச் சமயத்திலும் கடந்ததில் ை ஆல்ை, குரூரமும் கோபமும் கொலேயும் அதன் பழைய வாழ்க்கையில் இருந்தன. அவையெல்லாம் விலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/119&oldid=840565" இலிருந்து மீள்விக்கப்பட்டது