பக்கம்:சூரப்புலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெட்டிக்காரர்கள், ஒரு வாரம் வரையில் திருட்டுப்போகவில்லை என் பதே தங்களுடைய திறமைக்கு அடையாளம் என்று அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் அவர்களுக்குத் திறமை ஒன்றுமே இல்லை, புதிய கரவல்காரர்களே நோட்டம் பார்க்கவே திருடர்கள் ஒரு வாரம் பொறுத்திருந்தார்கள், அதற்குள் இவர் களின் தூக்கத்தின் பெருமை திருடர்களுக்குத் தெரிந்துவிட்டது. அன்று இரவிலும் இவர்கள் நன்ருகப் படுத்துத் தூங்கி விட்டார்கள். அந்தச் சமயம் பார்த்து நான்கு திருடர்கள் மெதுவாக நுழைந்தனர். பல கிடங்குகளில் உருளைக் கிழங்கு மூட்டைகள் இருந்தன. கோடியிலிருந்த ஒரு கிடங்கின் பூட்டைத் திறக்கத் திருடர்கள் முயன்றுகொண்டிருந்தார்கள். சூரப்புலி அதைக் கண்டு கொண்டது. ஆனல் காவல்காரர்கள் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களே மெதுவாக எழுப்பித் திருடர்களைக் காட்டிக் கொடுக்கவேண்டும் என்று அது நினைத்தது. காவல்காரர் களின் பக்கத்திலே சென்று, மெதுவாக ஒருவன் காலை நக்கிற்று. அவன் எழுந்திருப்பதாகக் காணுேம். பிறகு மற்றவனே எழுப்ப முயன்றது. அவனும் எழுந்திருக்கவில்லை; காலேக்கூட அசைக்க வில்லே. அவ்வளவு தூக்கம் அவர்கன் இரண்டு பேருக்கும். திருடர்கள் பூட்டைத் திறந்து, உருளைக்கிழங்கு மூட்டைகள் அடுக்கிக் கிடக்கும் அந்தக் கிடங்கிற்குள் நுழைந்துவிட்டார்கள். இந்தச் சமயத்தில் காவல்காரர்களை எழுப்பிவிட்டால், கிடங்கின் கதவை வெளிப்புறத்திலிருந்து சாத்திக்கொண்டு, பிறகு திருடர்களைக் கைப்பிடியாகப் பிடித்துவிடலாம். இதுதான் சூரப்புலியின் எண்ணம். ஆல்ை, காவல்காரர்கள் எழுந்திருப்பதாகக் காணுேம். திருடர்கள் ஆளுக்கொரு மூட்டையாகத் தூக்கிக்கொண்டு போய்விடுவார்களே என்று சூரப்புலிக்குக் கவலே. அதனுல் அது, காவல்காரர்களில் ஒருவர் போர்த்திருந்த துப்பட்டியைப் பிடித்து, வாயில்ை மெதுவாகக் கவ்வி இழுத்தது. அப்பொழுதும் அவன் தூக்கம் கல்யவில்லே. பிறகு சற்று வேகமாக இழுத்தது. துப்பட்டி முழுதும் தனியாக வந்துவிட்டது. அப்பொழுதுதான் அவன் எழுந்தான். ஆல்ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/12&oldid=840566" இலிருந்து மீள்விக்கப்பட்டது