பக்கம்:சூரப்புலி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சூரியன் உதயமாகிற சமயத்திற்கு மானசசரோவரத்தை அது அடைந்துவிட்டது. ஆனால், அதற்கு ஒரு பெரிய ஏமாற்றம். அங்கே பெளத்த மடாலயத்தைக் காணுேம். மாயமாக அது மறைந்து விட்டதைக் கண்டு சூரப்புலி திகைத்தது. துறவிக்கு உணவு கொண்டு செல்ல வழியில்லேயே என்று சோர்வடைந்தது. அப்படியே உறைபனியின் மேல் நின்று, விசனத்தோடு சுற்றிலும் பார்த்தது. உணவில்லாமல் திரும்பிச் செல்ல அதற்கு மனம் வரவில்ல். அதல்ை என்ன செய்வதென்று தெரியாமல் வெகு நேரம் அப்படியே நின்றிருந்தது. தூக்குக்கூடை பக்கத்திலே கிடந்தது. சூரியன் மேலே வரத் தொடங்கின்ை. உறைபனி மெது வாக உருகத் தொடங்கியது. சிறு சிறு வாய்க்கால்களில் தண்ணீர் மானசசரோவரத்தை நோக்கி ஓடலாயிற்று. என்ன ஆச்சரியம் ! திடீரென்று பெளத்த மடத்தின் மேற் பகுதிகள் உறைபனிக்கு மேலே தோன்றலாயின. இரவிலே பெப்த உறைபனியில் மடமே மறைந்து கிடந்ததை அப்பொழுது தான் குரப்புலி உணர்ந்தது. மேலும் கொஞ்ச நோம் அது ஆவலோடு காத்திருந்தது. மடத்தின் கதவு நன்ருகத் தெரிய ஆரம்பித்தவுடன் சூரப்புலி தூக்குக்கூடையை வாயில் கவ்விக் கொண்டு, வேகமாக அதனருகில் சென்று, முன் கால்களால் பல மாகத் தட்டிற்று. சிறிது நேரத்தில் கதவைத் திறந்துகொண்டு ஒரு சந்நியாசி எட்டிப் பார்த்தார். சூரப்புலியைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். குரப்புலி அங்குத் திரும்பிவந்த காரணத்தை மடத்திலிருந் தவர்கள் உடனே அறிந்துகொண்டார்கள். அதன் நோக்கத்தைத் தூக்குக்கூடை நன்கு காட்டிவிட்டது. சந்நியாசிகள் சூரப்புலியைத் தட்டிக் கொடுத்தார்கள். துறவிக்காக உணவு வகைகளைத் தூக்குக்கூடையின் அடியில் வைத்தார்கள். பிறகு, அதன் மேலே மானசத்திலே முளைக்கும் கோரைப்புற்களைப் பரப்பினர்கள். அதற்கும் மேலாகச் சூரப் புலிக்கு வேண்டிய ரொட்டித் துண்டுகளே ஒன்ருகச் சேர்த்துக் கட்டி வைத்தார்கள். சூரப்புலி தனது நன்றியைத் தெரிவிக்க வேகமாகத் தன் வால்க் குழைத்தது. சந்நியாசிகளே ஒவ்வொரு வசாக முகர்ந்து பார்த்தது. பிறகு, அது தூக்குக்கூடையை வாயில் கவ்விக்கொண்டு வேகமாகப் புறப்பட்டது. சந்நியாசிகள் தனியாக அதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/121&oldid=840568" இலிருந்து மீள்விக்கப்பட்டது