பக்கம்:சூரப்புலி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

Í 19 கொஞ்சம் கவரிமாட்டுப்பால் வைத்தார்கள். ஆனல், அதைச் சூரப் புலி குடிக்கவில்லே. வாலேக் குழைத்துக்கொண்டு அது கயிாைய திரியை நோக்கி ஓடலாயிற்று. அன்று மாலேயில் இருள் பரவுவதற்கு முன்குல் துறவியிருக்கும் குகையை அடைய வேண்டுமென்பது அதன் ஆசை. அதனல் மிக வேகமாகப் பாய்ந்து சென்றது. உணவு கொண்டுசெல்லு கின்ற குதூகலமும் அதற்குப் புதிய வலிமையைத் தந்தது. ஆனால், எதிர்பாராத ஒரு பெரிய தடை வழியிலே ஏற்பட் டது. திபெத்து நாட்டைச் சேர்ந்த மூன்று நாய்கள் பசி வெறியோடு எதிரே தோன்றின. பனிப்பிரதேசத்திலே உணவு கிடைக்காமல் அவை வயிருெட்டிக் கிடந்தன. அடர்ந்த மயிரோடு கூடிய அவை கரடிகளேப்போலப் பயங்கரமாகத் தோன்றின. அவற்றின் கண்களிலே ஒரு வெறி இருந்தது. ஒரே பாய்ச்சலிலே அவை சூரப்புலியை அணுகி அதன் வாயிற் கவ்வியிருந்த உணவுக் கூடையைப் பிடுங்க முயன்றன. ஒரே கணத்தில் சூரப்புலி என்ன செய்வதென்று தீர்மானித் தாக வேண்டும். திபெத்திய நாய்களோடு அது போரிடலாம். வலிமை வாய்ந்த மூன்று நாய்களோடு ஒரே சமயத்தில் போரிட்டு வெற்றி அடைவதென்பது அநேகமாக முடியாத காரியம். போரில் உயிரிழப்பதைத் தவிர வேறு பலன் ஏற்பட வழியில்லே. ஆளுல், குரப்புலி தன் உயிரை லட்சியம் செய்யவில்லை. போரிட்டு அங்கேயே மடிந்தால் துறவிக்கு உணவு கிடைக்காது. போரிலே வெற்றி பெறுவதானுலும் எதிர்த்து நிற்கும் நாய்களேக் கொன்ருே அல்லது கடித்துப் பயமுறுத்தி ஒட்டியோதான் ஆகவேண்டும். பிற உயிருக்குத் துன்பம் இழைப்பதைத் துறவி ஒரு நாளும் விரும்ப மாட்டார். அப்படித் துன்பமிழைத்துப் பெற்ற உணவை அவர் கன்னெடுத்தும் பார்க்கமாட்டார். குரப்புலியையும் அவர் பாராட்ட மாட்டார். சூரப்புலியே இப்பொழுது பிற உயிருக்குத் துன்பம் தர விரும்பவில்லே. ஆதலால், எப்படியாவது அந்தத் திபெத்து நாய்களிடமிருந்து தப்பிப் போக வேண்டுமென்று அது திர்மானித தது. அந்த நாய்களுக்கு வேண்டியது உணவு. தனக்காகச் சந்நியாசிகள் கட்டி வைத்திருக்கும் உணவு இருக்கவே இருக்கிறது. அதை அந்த நாய்களுக்குப் போட்டுவிடலாம். துறவிக்கு உண விருந்தால் அதுவே போதும். இவ்வாறு ஒரு நொடியிலே எண்ணி முடிவு செய்த சூரப்புலி, கூடையிலிருந்த தன் உணவுக்கட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/122&oldid=1276970" இலிருந்து மீள்விக்கப்பட்டது