பக்கம்:சூரப்புலி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயிலெடுத்து வீசிற்று. திபெத்து நாய்கள் மூன்றும் ரொட்டித் துண்டுகளின் வாசண்பை அறிந்து அக்கட்டின் மேல் பாய்ந்தன. அதைக் கைப்பற்றுவதற்காக ஒன்ருேடொன்று சண்டையிடத் தொடங்கின. அதுதான் சமயமென்று சூரப்புலி தூக்குக்கூ.ை போடு நாற்கால் பாய்ச்சலில் கயிலாயகிரியை நோக்கி ஓடிற்று. துறவி இருக்குமிடத்தை அடையும்போது இரவு பத்து மணிக்கு (ஐமாைகிவிட்டது. அன்று பெளர்ணமிக்கு முதல் நாளாகையால் நிலவின் ஒளி அற்புதமாகப் பரவிக்கொண்டிருந்தது. பனி மயமாக வீற்றிருக்கும் விசுவலிங்கமும் அதைச் சுற்றியுள்ள பனிப் பிரதேசங்களும் நிலவொளியிலே சொல்ல முடியாத அழகோடு இளங்கின. தூய வெண்மை நிறத்திற்குள்ளே இடையிடையே நீமுைம் பசுமையும் கலந்து கலந்து விசுவலிங்கம் காட்சியளித்தது. துறவி அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு குகையின் வாயிலில் நின்றுகொண்டிருந்தார். சூரப்புலியையும், அதன் வாயில் உள்ள துக்குக்கூடையையும் பார்த்ததும் துறவிக்கு விஷயம் விளங்கி ட்ெடது. மானசசரோவரத்துக் கோரைப்புல்லும் அது அங்கே சென்று திரும்பியிருக்கிறது என்பதைக் காட்டிற்று. தூக்குக் கடை நிறைய பெளத்த சந்நியாசிகள் உணவு அனுப்பியிருந்தார்கள் என்பதையும், அந்த உணவிலே ஒரு பகுதியை வழியிலே பதி §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/123&oldid=1276968" இலிருந்து மீள்விக்கப்பட்டது