பக்கம்:சூரப்புலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இன்னும் அவனுக்குத் தூக்கம் கலையவில்லை, தூக்க வெறியோடு அவன் சூரப்புலியைப் பார்த்தான். "துப்பட்டியைப் பிடித்தா இழுக்கிறாய்? திருட்டு நாயே' என்று கூவிக்கொண்டு, அவன் தன் பக்கத்திலே வைத்திருந்த காவல் தடியை எடுத்து ஓங்கி வீசினான். சூரப்புலி அந்தக் தடிக்குத் தப்ப முயன்றது. ஆனால் முடியவில்லை. நீண்ட மூங்கிலான அந்தக் காவல் தடி, மூக்கின் மேலே பலமாகத் தாக்கிவிட்டது. வீல்வீல் என்று கத்திக் கொண்டு சூரப்புலி ஓட ஆரம்பித்தது. அப்படி ஓடும் போதே அதற்கு ஒரு யோசனை தோன்றிற்று. திருடர்கள் புகுந்த கிடங்கின் பக்கமாக, அது கத்தி அலறிக்கொண்டே ஓடிற்று. அதன் குரலைக் கேட்டுத் திருடர்கள், தப்பினால் போதுமென்று மூட்டைகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். இவ்வாறு திருடர்களை ஓட்டி விட்டதால் அதைத் தெரிந்துகொண்டு, அடுத்த நாளாவது காவல் காரர்கள் தன்னிடத்திலே அன்பு காட்டுவார்கள் என்று அது அங்கேயே ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது. மூன்று நாளாக அது பட்டினி. தண்ணீர் சேத்தும் கிணற்றடியிலே தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தவிர வேறு ஒன்றும் அதற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/13&oldid=1276985" இலிருந்து மீள்விக்கப்பட்டது