பக்கம்:சூரப்புலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 அது பவானியாற்றின் மேலுள்ள பெரிய பாலத்தைக் கடந்தது. கமுகுத் தோப்புகளுக்குள்ளே நுழைந்தது. அவற்றையும் தாண்டினல் காட்டுமரங்கள் வளர்ந்த மலேச்சாரலே அடையலாம் . கமுகுத் தோப் புக்குள்ளே மனிதர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகில்கூடச் செல்லாமல் சூரப்புலி விலகிச் சென்றது. மாலே நேரத்திற்குள்ளே அடர்ந்த காட்டிற்குள்ளே அது புகுந்துவிட்டது. திடீரென்று வேகமாக இருள் சூழத் தொடங்கியது. மேட்டுப்பாளையத்திலே இவ்வளவு வேகமாக இருள் சூழ்வதை அது பார்த்ததில்லை. காட்டுக்குள்ளிருந்துதான் மற்றப் பகுதிகளுக்கு இருள் படையெடுப்பதைப்போல் தோன்றியது. எதிர்பாராது திடீரென்று சூழ்ந்துகொண்ட அந்த இருட்டிலே என்ன செய்வதென்று அதற்குத் தோன்றவில்லே. நாள் முழுவதும் எங்கும் நிற்காமல் ஓடி வந்ததால் களப்பு அதிகமாயிற்று : நாக்கு வறண்டது. அதற்குத் தண்ணிர் எங்கு கிடைக்கும் என்று கூடத் தெரியாது. எதேதோ பயங்கரமான குரல்கள் கேட்டன. என்ன மிருகங்கள் இப்படி முழங்கு கின்றன என்று அதற்குத் தெரியவில்லே. அது கண்டிருக்கும் எந்த மிருகமும் இப்படிக் குரல் கொடுத்ததில்லை. ஒரு புலியின் குரல் வெகுதூரத்திலே கேட்டது. அக்குரல் அடங்கிய பிறகும் மலைச் சாரலிலே எதிரொலி வெகுநேரம் வரையிலும் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்தக் குரலேக் கேட்டதும் கானகமே கொஞ்ச நேரம் பயந்து மெளனமாக இருந்ததுபோலத் தோன்றிற்று. அந்தக் குரலேக் கேட்டு எல்லாப் பிராணிகளும் திகைத்துப்போப் ஊமையாகி விட்டனவோ என்னவோ ? சூரப்புலியின் உள்ளத்திலே அக்குரலேக் கேட்டதும் புதுவிதமான பயம் உண்டாயிற்று. தடியடியைவிட அக் குரல் கொடுமையானது என்று அதற்குப் பட்டது. சற்று நேரத்தில் பக்கத்திலே சிறுசிறு குரல்கள் எழுந்தன. காட்டுக்கோழி, மயில் முதலான ஆயிரக்கணக்கான பறவைகள் இரவிற்காக அடங்கும் சமயத்தில் பலவிதமாகக் கூவின. இரவில் இரை தேடப் புறப்படும் சிறிய விலங்குகளின் காலடி ஓசை மெதுவாக நாற்புறமும் கேட்டது. கானகத்திலே இருள் சூழ்ந்து எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/16&oldid=840576" இலிருந்து மீள்விக்கப்பட்டது