பக்கம்:சூரப்புலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அசைவற்றுக் கிடப்பதுபோல வெளிக்குத் தோன்றிலுைம் அந்தச் சமயத்திலே ஆயிரம் ஆயிரம் பிராணிகள் பதுங்கிப் பதுங்கி நடந்தன. ஆயிரம் ஆயிரம் பிராணிகள் உயிருக்குப் பயந்து எச்சரிக்கையோடு மறைவிடங்களிலே பதுங்கியிருந்தன. உறக்கம் வந்த போதிலும் சிறு ஒலியையும் அவை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தன. சூரப்புலிக்குத் தானும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எப்படியோ தோன்றிற்று. பழங்காலத்திலே வனத்திலே திரிந்த அதன் மூதாதையரின் உணர்ச்சி அதன் உள்ளத்திலே எங்கோ மறைந்திருந்து இப்பொழுது திடீரென்று மேலோங்கி எழுந்துவிட்டது. சூரப்புலி பசியையும், தாகத்தையும், உடல் நோவையும் மறந்து எச்சரிக்கையோடு ஒர் அடர்ந்த புதரின் மத்தியிலே படுத்தது. அதன் காதுகள் அடிக்கடி உயர்ந்து நின்று ஒலிகளேக் கவனித்தன. அதற்கு உறக்கம் வரவேயில்லே. திடீர் திடீரென்று அது துள்ளியெழும். ஏதோ ஒரு பிராணி பக்கத்திலே பதுங்கிப் பதுங்கி வருவதுபோல அதற்குத் தோன்றிற்று. ஆல்ை எதுவும் வரவில்லே. இருட்டு இவ்வளவு கருங் கும்மென இருக்குமென்று அதற்குத் தெரியவே தெரியாது. வயல் வெளிகளிலேயும், மேட்டுப்பாளையத்திலும் இருட்டிலே இருந்து சூரப்புலிக்குக் பழக்கமுண்டு. அதன் கண்கள் அந்த இருட்டிலே நன்ருகப் பார்க்கப் பழகியிருந்தன. ஆனல் கானகத்துப் புதர் இருட்டிலே ஒன்றுமே தெரியவில்லே. அதல்ை சூரப்புலி திடுக்கிட்டெழுவதும் பிறகு மெதுவாகப் படுப்பதுமாக இருந்தது. விடியும் வரையில் தூக்கமில்லாமல் சூரப்புலி பயத்தோடு இரவைக் கழித்தது. இன்னும் நன்ருக விடியவில்லே. அடர்ந்த மரஞ்செடி கொடிகளுக்கிடையே சூரியனுடைய கதிர்கள் விரைவிலே புகுந்து ஆதிக்கஞ் செலுத்த முடியாதுபோலிருக்கிறது. பளிச்சென்று விடித்த் பிறகு முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளத் தண்ணிரைத் தேடிப்போக வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சூரப்புலியின் முன்னுல் திடீரென்று ஒரு பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது. அப்படி ஒரு சம்பவம் சுமார் 20 கஜ தூரத்தில் நடக்குமென்று அது எதிர் பார்க்கவேயில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/17&oldid=840577" இலிருந்து மீள்விக்கப்பட்டது