பக்கம்:சூரப்புலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வெளியே வந்தால் சிறுத்தையின் கோரைப்பற்களுக்கு இரையாக வேண்டுமோவென்ற சந்தேகம் அதைப் பிடித்தது. அந்தச் சந்தேகத் தாலும் பயத்தாலும் அதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லே பசியும் தாகமும் உடல்வலியும் எப்படியோ மறைந்துவிட்டனபோலத் தோன்றின. சூரப்புலி அப்படியே படுத்துக் கிடந்தது. நன்ரு: விடிந்த பிறகு, புதரைவிட்டு வெளியே புறப்படலாம் என்ற நினைப்பு அதன் உள்ளத்திலே மெதுவாக உருவாயிற்று. இந்த நிலையிலே மற்ருெரு கொலேக்காட்சி நடைபெற்றுவிட்டது. சிறுத்தையும் எருமையும் செய்த போராட்டத்தால் பயந்து பதுங்கி பிருந்த காட்டுப் பிராணிகளிடையே மறுபடியும் புதிய உயிர் வந்தது போலத் தோன்றியது. காட்டுக்கோழிகள் கூவின, மயில்கள் தூரத்திலே அகவும் ஒலி கேட்டது. சிறு விலங்குகளின் நடமாட்டப் மெதுவாகத் தொடங்கிற்று. அப்பொழுது ஒரு காட்டெலி தன் வளையை விட்டுப் பதுங்கி, வெளியே வந்தது. குட்டைக்கு ஒரு பக்கத்திலே உயர்ந்து வளர்ந்திருந்த நெல்லி மரத்திலிருந்து இரவிலே விழுந்து கிடந்த காய்களேத் தேடி அது வந்திருக்கவேண்டும். ஆனல் அது மரத்தடிக்குச் செல்லவேயில்லே. பாதி வழியிலேயே அதன் ஆயுள் முடிந்துவிட்டது. எங்கோ இருந்து ஒரு ஆந்தை அதன்மே.ே திடீரென்று பாய்ந்தது. பகலிலே பார்த்தால் குருடுபோலத் தோன்றும் அந்த ஆந்தைக்கு மங்கிய கால் வெளிச்சத்திலே கண் நன்ருகத் தெரிந்தது. அது ஒரே பாய்ச்சலில் எலியைத் தன் கால்விரல்களில் பற்றிக்கொண்டு தனது கூரிய அலகால் தலையில் குத்திக் கொன்று விட்டது. அது சுற்றுமுற்றும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே தான் கொன்ற இரையைக் கொத்தித் தின்னலாயிற்று. சூரப்புலிக்கு ஆந்தையிடத்திலும் பயம் எற்பட்டுவிட்டது இரையை முடித்துவிட்டு ஆந்தை அந்த இடத்தைவிட்டுப் பறந்து போகும் வரையில் அது புதரை விட்டு அசையவே இல்ல்ே அப்படியிருக்கும் பொழுது அதே இடத்தில் மற்ருெரு கொன் நடக்குமென்று அது எதிர்பார்க்கவேயில்லே. குட்டையிலுள்ள தண்ணீர் பல பிராணிகளுக்குத் தாகத்தை போக்கி உயிரைக் காப்பாற்றுவது போலவே வேறு பல பிராணிகளுக்கு உயிரைக் கவரும் யமனுகவும் இருந்தது. அந்தக் குட்டை.ை விட்டால் அப்பகுதியில் குடிநீருக்கு வேறு வழி இல்லை, அதன. அங்குப் பல பிராணிககள் வருவது வழக்கம். கடமான் ஒன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/21&oldid=840581" இலிருந்து மீள்விக்கப்பட்டது