பக்கம்:சூரப்புலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சூரப்புலிக்கு அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லே, அதற்கு ஒரே பயம். எப்படியாவது அங்கிருந்து தப்பித்துக்கொண்டு போய் விட வேண்டுமென்று தோன்றிற்று. அடர்ந்த கானகத்திலே வசிக்க வேண்டுமானல் எந்த நிமிஷத்திலும் ஆபத்தை எதிர்பார்த்து எச்சரிக்கையோடிருக்க வேண்டுமென்று அதற்குத் தெரிந்தது. கானகத்திலே அன்பு என்பதில்லே. இங்கே பலமொன்றே உயிரைக் காப்பாற்றும். பலத்தோடு கூர்மையான காதுகளும் கண்களும் மின்னல் வேகத்தில் க்ாரியம் செய்யும் சக்தியும் இருக்கவேண்டும். பலமில்லாவிட்டாலும் மற்றவை இருந்தால் உயிர் பிழைக்கலாம். தன்னிலும் வலிமை குறைந்த பிராணிகனே ஈவிரக்கமில்லாமல் கொல்லவேண்டும். வலிமை யில்ை தனக்கு மீறிய பிராணிகளுக்கு அகப்படாமல் தந்திரமாகத் தப்ப வேண்டும். ஒடிப் பிழைப்பதற்குக் கால்களாவது வேகமுள்ளவைகளாக இருக்கவேண்டும். கானகத்தின் கொடுமையைப் பார்த்த பிறகு பாக்கு வியாபாரியின் மகனுடைய தொல்லேயும், காவல்காரர்களுடைய மூங்கில் தடிகளும் குரப்புலிக்கு அற்பமாகத் தோன்றின. மனிதர்களேவிட்டுக் காட்டில் வாழ்வதிலே இப்பொழுது அதற்கு அத்தனே உறுதியில்லே. எந்த மனிதனுவது அன்போடு ஆதரிப்பாைைல் அவைேடு இருந்துவிடலாம் என்கிற மனப்பான்மையோடுதான் அது புதரைவிட்டு வெளியே நகர்ந்தது. குட்ட்ைக்குச் சென்று தண்ணீர் குடிக்க அதற்குத் தைரிய மில்லை. பக்கத்திலே இரலையை விழுங்கிக்கொண்டிருக்கும் மலேப் பாம்பை மறுபடியும் கண்ணெடுத்துப் பார்க்க அது விரும்பவில்லே. மறுதிசையிலே மர அடர்த்தி குறைந்த பகுதியை நோக்கி அது விரைந்தது. அதற்குள் நல்ல வெளிச்சமாகிவிட்டபடியால் சூரப் புலிக்கு அதிக சிரமமிருக்கவில்லே. குட்டைப்பகுதியை விட்டு வெகுதூரம் வந்த பிறகுதான் சூரப் புலிக்குப் பசியுணர்ச்சி மீண்டும் ஏற்பட்டது; தாகமெடுத்தது. அடிபட்ட உடம்பிலும் வலி தோன்றிற்று. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அது கால்போன திசையில் ஒடிக்கொண்டிருந்தது. அப்படி ஒடும்பொழுதுதான் அந்த மனிதன் எதிர்ப்பட்டான். எங்கிருந்தோ அவன் திடீரென்று தோன்றின்ை. காட்டிலே மரங்களின் பின்னலிருந்துவரும்போது எங்கிருந்து வந்ததாகக் கண்டு கொள்ளவே முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/23&oldid=840583" இலிருந்து மீள்விக்கப்பட்டது