பக்கம்:சூரப்புலி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யெல்லாம் சட்னி மயமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்த வில்லே. மறுபடியும் ஓர் இட்டலியை சூரப்புலிக்கு வீசினன். வேருேர் இட்டலியைக் கையில் எடுத்துக்கொண்டு சூரப்புலியை அருகிலே கூப்பிட்டான். சூரப்புலி கீழே கிடந்த இட்டலியைத் தின்றுவிட்டுப் பிறகு தயங்கித் தாடிக்காரனிடம் சென்று, அவன் கையில் இருந்த இட்டலியை வாயில் கெளவிற்று. அப்படி வாடா, பயப்படாதே" என்று சொல்லிக்கொண்டே தாடிக்காரன் அதன் முதுகிலே ஓங்கித் தட்டின்ை. இப்படித் தட்டுவது அவனுடைய இயல்பு என்பதைத் தெரிந்துகொள்ள சூரப்புலிக்குப் பல நாட்கள் ஆயின. அவன் தட்டும் போதெல்லாம் எதோ ஒரு மரத் தடி முதுகின் மேலே விழுவது போன்ற உணர்ச்சியும் வலியும் ஏற்படும். அவன் போடும் சோற்றுக்காக அங் கேயே தங்க வேண்டுமானல் அவனுடைய கையின் கொடுமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று சூரப்புலிக்குத் தெளிவாகி விட்டது. காட்டுக்குள்ளே புகுந்து எதேச்சையாக வாழவும் அதற்குப் பயமாக இருந்தது. அதல்ை, தாடிக்காரனுடைய கொடுமையைச் சகித்துக்கொள்ள அது தீர்மானித்துவிட்டது. ஆனால், அவனுடைய கைக்கு எட்டாமல் கூடிய வரையில் வாழவேண்டுமென்று முடிவு செய்தது. அவன்மேல் ஏற்பட்ட வெறுப்பு வளர்ந்துகொண்டே இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/26&oldid=1276987" இலிருந்து மீள்விக்கப்பட்டது