பக்கம்:சூரப்புலி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இட்டலியைத் தின்றுவிட்டு நீரோடைக்குச் சென்று ஆவலோடு சூரப்புலி தண்ணீரைக் குடித்தது. அப்பொழுதுதான் அதற்குப் புதிய உயிர் வந்ததுபோல் தோன்றிற்று. பிறகு சூரப்புலி மெதுவாகச் சுற்றுப்புறத்தை ஆராயத் தொடங்கியது. குகைக்குள்ளேயும் சென்று பார்த்தது. தாடிக்காரனும் கருப்பனும் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டும், ரூபாயை எண்ணிக்கொண்டும் இருந்ததால் சூரப்புலியைப் பற்றிக் கவனிக்கவில்லே. குகைக்குள்ளே ஒரே இருட்டாக இருந்தது. கொஞ்ச நேரம் உள்ளே இருந்தபிறகுதான் அங்கேயிருக்கும் பொருள்கள் கண்ணுக்குத் தென்படலாயின. ஒரு பக்கத்திலே நூற்றுக்கணக்கான கண்ணுடிப் புட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. மற்ருெரு பகுதியிலே பெரிய பெரிய தாழிகளும் மிடாக்களும் பானைகளும் இருந்தன. அவற்றிலிருந்து மொய்' என்ற சத்தம் மெதுவாக வந்துகொண்டிருந்தது. ஏதோ பொருள்கள் கொதிப்பதால் நுரை பொங்கி எழுவதும் கண்ணுக்குத் தெரிந்தது. அதிலிருந்து ஒரு வகையான நெடி எழுந்து மூக்கைத் துாேத்தது. மரப்பட்டைகளும் பனவெல்லமும் மற்ருெரு பக்கத்திலே கிடந்தன. எதற்காக இவையெல்லாம் அந்தக் காட்டுக்குள்ளே இருக் கின்றன என்பதைப்பற்றிச் சூரப்புலிக்கு யோசனை ஏற்படவில்லை. வேண்டியபோது பனவெல்லம் தின்னக் கிடைக்கும் என்று மட்டும் யூகித்துக்கொண்டது. அப்பொழுதே ஒரு சிறு துண்டு வெல்லத்தையும் லபக்கென்று வாயில் கெளவிக்கொண்டு குகையின் மறைவிலிருந்து தின்னலாயிற்று. அரசாங்க உத்தரவை மீறித் திருட்டுத்தனமாகச் சாராயம் காய்ச்சுகின்ற கூட்டத்திற்கு வந்து சேர்ந்திருக்கிற விஷயம் குரப்புலிக்கு அப்பொழுது தெரியாது. தெரிந்திருந்தாலும் அது அந்தக் கூட்டத்தைவிட்டுப் போயிருக்காது. அரசாங்கத்தினிடத்திலே அத்தனை விசுவாசமோ அல்லது சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவேண்டு மென்ற உணர்ச்சியோ அதற்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆறறிவு படைத்த மனிதர்களுக்கே அவை இல்லாதபோது சாதாரணமான ஒரு நாயிடம் எதிர்பார்க்க முடியுமா? தாடிக்காரன் குகையிலிருந்து எடுத்துவந்த புட்டி காலியாகி விட்டது. அதைக் காலி செய்வதிலே கருப்பனுக்கும் பங்கு உண்டு. புட்டி காலிய சக ஆக அவர்களுக்குள்ளே வார்த்தை தாறுமாருக எழுந்தது. காரணமின்றிச் சச்சரவு செய்துகொண்டு இருந்தார்கள். சரல் கறி கிடைக்கவில்லேயென்று தாடிக்காரனுக்குப் புதிதாகக் கோபம் பிறந்தது. கருப்பன் சொன்ன சமாதானம் இப்பொழுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/27&oldid=840587" இலிருந்து மீள்விக்கப்பட்டது