பக்கம்:சூரப்புலி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. குடி வெறியால் கருப்பனும் ஏதேதோ தாறுமாருகப் பேசினன். பிறகு இரண்டு பேரும் உளறிக்குளறிப் பேசிக்கொண்டே கீழே படுத்துத் தூங்கிவிட்டார்கள். சூரப்புலியும் சுகமாகப் படுத்துத் தூங்கிற்று. உச்சிநேரத்திற்கு நான்கு பேர் புதிதாக அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்களிலே ஒருவன்தான் அந்தக் கூட்டத்திற்கு முதலாளி. மற்ற இரண்டு பேர் பெரிய பெரிய மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். எல்லோருக்கும் வேண்டிய உணவு வகைகள் அந்த மூட்டைகளில் இருந்தன. முதலாளியின் குரலேக் கேட்டதும் தாடிக்காரன் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்; கருப்பனும் எழுந்து மரியாதையாக நின்ருன். "எண்டா தாடி, கணக்கெல்லாம் சரியாகப் பார்த்து வைத்திருக் கிருயா?” என்று அதட்டின்ை முதலாளி. அவனக் கண்டால் தாடிக் காரனுக்கு ஒரே பயம். அதல்ை தடுமாறிப் பதில் பேசின்ை. எல்லாம் தயாராக இருக்குதுங்க. கணக்கெல்லாம் சரியாப் போச்சுது, பாக்கி யெல்லாம் கருப்பன் வசூல் செய்துகொண்டு வந்து விட்டான்,” என்று தாடிக்காரன் சொல்லிக்கொண்டே ஒரு பணப் பையை முதலாளியிடம் நீட்டின்ை. முதலாளி அதை வாங்கிக் கொண்டு, சரி, சாப்பிட்டுவிட்டுக் கணக்கைப் பார்க்கலாம்' என்று கூறினன். பிறகு சாப்பாடு நடந்தது. தாடிக்காரனுக்கு விருப்பமான உணவு வகைகளெல்லாம் கிடைத்தன. அந்தச் சோற்றுக்காகத்தான் அவன் இந்தக் கூட்டத்திலே தங்கியிருக்கிருன் என்பது முதலாளிக்குத் தெரி யும். அதனல், அவனுக்கு விருப்பமானவற்றைக் கொடுத்துவிட்டு அவனிடம் ஏராளமான வேலே வாங்கின்ை அவன். குகையில் எந்த நேரத்திலும் இருந்துகொண்டு சாராயம் காய்ச்சும் வேலையைச் செய் பவன் அவனே. மற்றவர்களெல்லாம் வேண்டிய சாமான்களைச் சேகரிப் பதும் சாராயப் புட்டிகளைத் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு போப் விற்பதும் ஆகிய காரியங்களில் ஈடுபட்டவர்கள். தான் செய்கின்ற வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லே என்று தாடிக்காரனுக்கு உள்ளுக்குள்ளே வருத்தம். இருந்தாலும் அதை முதலாளியிடம் சொல்ல அவனுக்குப் பயம், முதலாளி அவனே வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவான். விருப்பமான உணவைக் கொடுப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/28&oldid=840588" இலிருந்து மீள்விக்கப்பட்டது