பக்கம்:சூரப்புலி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தோடு அவனே அடிக்கடி மிரட்டிக்கொண்டிருந்தால்தான் தனது காரி யம் பலிக்கும் என்று முதலாளி அறிவான். ஒரு வேலையும் செய்யா மல் வரும்படியிலே பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதற்கு, இப்படி மற்றவர்களுடைய தன்மையை அறிந்து அவர்களே அடக்கி நடத்தும் திறமையே காரணமாக இருந்தது. சூரப்புலிக்குப் புலால் உணவும் எலும்புகளும் நி ைற ய க் கிடைத்தன. இந்த நாய் எப்படிக் கிடைத்தது?’ என்று முதலாளி சாப்பிட்டுக்கொண்டே கேட்டான். கருப்பன் அது கிடைத்த விவரத் தைச் சொன்னன். “குன்று மேலே தாடிக்காரைேடு இருந்து காவல் காக்க இதைப் பழக்கலாம்' என்றும் அவன் சொன்னன். முதலாளி இதை ஆமோதித்தான், "ஆமாம், எவளுவது இந்தப் பக்கம் வந்தால் மெதுவாக உறுமிக்காட்ட இதைப் பழக்கிவிட்டால் நமக்கு நல்லது. இந்தப் பக்கத்திற்கு இதுவரை யாரும் வரவில்லை. இருத்தாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.” முதலாளி சொன்னதை மற்றவர்கள் ஆமோதித்தார்கள். சூரப்புலியைப் பழக்கும் பொறுப்பும் தாடிக்காரனுக்கு ஏற்பட்டது. கொஞ்ச நாட்களிலே சூரப்புலியும் அவனுடைய எண்ணத்தை அறிந்து நடக்கப் பழகிக் கொண்டது. தினமும் வேளை தவருமல் நல்ல உணவு ஏராளமாகக் கிடைத்ததால் அது இப்போது மளமளவென்று வளரத் தொடங்கியது. இருந்தாலும், தாடிக்காரனுடைய கை அதன் முதுகின் மேல் தடாலென்று விழும்போதெல்லாம் வலி பொறுக்க முடியாமல் அது கத்துவது நிற்கவில்லே. முதலாளியிடம் இருக்கும் வெறுப்பை யெல்லாம் தாடிக்காரன் சூரப்புலியிடம் காட்டுவான். சூரப்புலியை முதுகில் அடிக்கும்போது முதலாளியை அடிப்பதாக அவன் நினத்துக் கொள்ளுவானே என்னவோ? சூரப்புலி கைக்கு எட்டும் போதெல் லாம் அதை அடிப்பதில் அவன் உற்சாகத்தோடிருந்தான். சூரப்புலிக்கு தாடிக்காரனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் அன்பு பிறக்கவில்லே. இருந்தாலும், கிடைக்கும் சோற்றுக்கு நன்றியாக அது எச்சரிக்கை யாகவே தனது காரியத்தைச் செய்துகொண்டு இருந்தது. அந்தக் கூட்டத்தார் குகையிலே சந்திக்கும்போது சூரப்புலி குன்றின் மேலே ஓர் உயரமான பாறையில் படுத்துக்கொண்டு, நாலு பக்கமும் பார்த் திருக்கும். வேற்று மனிதர் யாராவது தூரத்திலே வருவதாகத் தெரிந் தால் மெதுவாகக் குரைக்கும். அல்லது குகைக்குள்ளே ஓடி வந்து பரபரப்போடு முன்னும் பின்னும் திரியும். அதன் செய்கையிலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/29&oldid=840589" இலிருந்து மீள்விக்கப்பட்டது