பக்கம்:சூரப்புலி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிச்சயமானவுடனே முதலாளியும் மற்றவர்களும் கைது செப்யப்பட் டிருப்பார்கள் என்பதும் அவனுக்கு விளங்கிவிட்டது. சூாப்புலிமீது அவனுக்கு அடங்காத கோபம் உண்டாயிற்று. அது தன் கடமையைச் செய்யவில்லே என்று அவன் முடிவு செய்தான். அதற்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றிற்று. தான் தப்பித்துக்கொண்டாலும் இனிமேல் ஈரல் கறி கிடைக்காதென்று அவனுக்கு என்றுமில்லாத கோபம் வந்துவிட்டது. தாடிக்காரன் மெதுவாகச் சூரப்புலியைக் கூப்பிட்டான். அங்கே கிடந்த எலும்புத் துண்டுகளைக் கையிலெடுத்து ஆசை காட்டின்ை. சூரப்புலி மெதுவாக அருகே வந்தது. சட்டென்று அவன் அதைப் பிடித்து ஒரு கயிற்றில் கட்டிவிட்டான். சூரப்புலி சந்தேகத்தோடு பார்த்தது. பிறகு, தாடிக்காரன் நிதானமாக ஒரு பெரிய மரக்கொம்பை "டுத்து வந்தான். விறகுக்காக அது குகைக்கு வெளியே அடுப்படி யில் கிடந்தது. அதைக் கொண்டு சூரப்புலியின் மண்டையிலே ஓங்கி யடித்தான். அடிக்குத் தப்புவதற்காக அது எட்டிப் பாய்ந்தது. ஆல்ை கட்டிக் கிடக்கும் அதல்ை ஒட முடியுமா ? தலேக்கு வந்த அடி அதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/32&oldid=1276983" இலிருந்து மீள்விக்கப்பட்டது