பக்கம்:சூரப்புலி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 கிடைத்தபோதெல்லாம் சூரப்புலியை ஓங்கியோங்கி அடிப்பது அவன் வழக்கம். அது வலி பொறுக்காமல் சத்தம் போடும்போதெல்லாம் அவன் சிரித்து மகிழ்ந்தான். அப்படிப்பட்டவனுக்கும் அது நன்றி போடு உழைத்து வந்தது. அவர்கள் சாராயத்தை அதன் வாயில் ஊற்றியிருக்காவிட்டால் அன்றைக்கும் அது அவர்களைப் போலீசாரிட மிருந்து காப்பாற்றியிருக்கும். அவர்கள் செய்த தவறுதலுக்காகச் குரப்புலியைத் தாடிக்காரன் இவ்வாறு கால்கள் ஒடிந்து போகும்படி அடிக்கலாமா? மனிதன் இரக்கமற்றவன். அவன் சுயநலக்காரன். அவைேடு வாழ்வதைப்போலத் துன்பமான காரியம் வேருென்றுமில்ல். அவனைக் கண்டால் கடித்துப் பழி வாங்க வேண்டும். இவ்வாறு பலப் பல எண்ணங்கள் அதன் உள்ளத்திலே தோன்றி அல் மோதின. தாடிக்காரனேக் கண்டால் பழிவாங்க வேண்டும் என்ற ஆத்திரம் அதன் உள்ளத்திலே எல்லாவற்றிற்கும் மேலாக நெருப்புப்போல் கொழுந்து விட்டது. ஆல்ை அது எப்படித் தாடிக்காரனப் பார்க்கப் போகிறது? அவன் இனிமேல் அங்கு வரமாட்டான். சூரப்புலியாலும் அவனத் தேடிப்போக முடியாது. அது பசியாலும் தாகத்தாலும் உடல் வலியாலும் துன்பப்பட்டு அந்தக் குகைக்குள்ளேயே கிடந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாக வேண்டியதுதான். இதை நினைக்கும் போது குரப்புலியின் உடம்பெல்லாம் கொதித்தது. அதன் தொண்டை வாண்டது. அது கோவென்று அலறி ஊளேயிட்டது. அந்தக் குகைப்பகுதியில் மனித நடமாட்டம் முன்பு பலகாலமாக இருந்ததால் கொடிய வன விலங்குகள் நல்ல வேளையாக அங்கு வரவில்லை. வத் திருந்தால் சூரப்புலி அவற்றிற்கு இரையாகியிருக்கும். இப்படி அது பல முறை ஊளையிட்டுப் புலம்பிற்று. அந்தப் புலம்பல் எப்படியோ அந்தப் பக்கமாகத் தற்செயலாக மூன்ரும் நாள் மாயிைல் சென்ற ஒரு துறவியின் காதில் விழுந்துவிட்டது. அவர் சட்டென்று நின்று உற்றுக் கேட்டார். மறுபடியும் அந்த வேதனைக் குரல் கேட்டது. அவர் காட்டுக்குள்ளே புகுந்து போவதை நிறுத்தி மெதுவாக அந்தச் சிறிய குன்றைக் கவனித்தார். போலீசார் வந்து சென்றதால் ஓடைக்குப் பக்கத்திலிருந்த குறுகலான வழியில் செடிகள் ஒடிந்து தாறுமாருகக் கிடந்தன. அதன் வழியாக அவர் உள்ளே நுழைந்து, குகைக்குள்ளே இருந்த சூரப்புலியைக் கண்டார். தாயின் பரிதாபமான நிலையைக் கண்டு மனம் வருந்தி அவர் அதன் அருகில் சென்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/34&oldid=840595" இலிருந்து மீள்விக்கப்பட்டது