பக்கம்:சூரப்புலி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 துறவியின் நீண்ட தாடியைப் பார்த்ததும் தாடிக்காரனின் மேலிருந்த ஆத்திரமெல்லாம் சூரப்புலியின் உள்ளத்திலே கொந்தளித்து எழுந்தது. முன் ல்ை இருப்பவர் யாரென்றுகூடக் கவனியாமல் அது அவர் அன்போடு நீட்டிய கையைப் பிடித்துக் கடித்தது. அதைக் கண்டு துறவி கோபம் கொள்ளவும் இல்லே பயமடையவும் இல்லை. அவர் சிரித்துக்கொண்டே தம் கையை விடுவித்துக் காயங்களிலிருந்து பீரிட்டு வந்த ரத்தத்தைத் தம் மேலே போட்டிருந்த நீண்ட மேலாடையை கிழித்துத் துடைத்துக் கொண்டார். காயங்களின்மீது ஏதோ மருந்தை வைத்துக் கட்டிக் கொண்டு மீண்டும் சூரப்புலியிடம் வந்தார். சூரப்புலி மறுமுறையும் அவரைக் கடிக்க முயன்றது. ஆளுல், இந்தத் தடவை துறவி ஏமாற வில்லை. அவர் சாமர்த்தியமாகச் சூரப்புலியின் தலயைக் கீழே அழுத்திக்கொண்டு, அதன் வ ச ைய யு ம் கால்களையும், தமது மேலாடையை மேலும் கிழித்து அதன் உதவியால் கட்டி வைத்தார். சூரப்புலி துள்ளிப் புரண்டு கொண்டு ஓலமிட்டது. ஆல்ை, அதல்ை வேருென்றும் செய்ய முடியவில்லே. துறவி வெளியே கிடந்த பெரிய கட்டையொன்றை மெதுவாகக் குகைக்குள்ளே கொண்டு வந்து சூரப்புலியின் முன்னே போட்டார். பிறகு சில நீண்ட காட்டுக் கொடிகளைப் பிடுங்கிக்கொண்டு வந்தார். கொடி களின் உதவியால் சூரப்புலியைக் கட்டையோடு சேர்த்து நன்ருகக் கட்டிவிட்டார். சூரப்புலியால் இப்பொழுது உடம்பையும் அசைக்க முடியவில்லை. அது அசையாமல் கிடந்தது. புதிய விபத்து ஒன்று நேரப்போகிறது என்று பயந்து கத்திற்று. பிறகு, நிதானமாக அந்தத் துறவி சூரப்புலியின் பின்னங்கால் களேத் தொட்டுத் தடவிப் பார்த்தார். ஒவ்வொரு காலிலும் எலும்பு ஒடிந்த பாகததிலே அவர் தொட்டு அழுத்திப் பார்த்த பொழுது சூரப்புலி வீரிட்டுக் கத்திற்று. பின்னங்கால்கள் இரண்டிலும் துடைக்குப் பக்கத்தில் எலும்பு முரிந்து இருப்பதைத் துறவி கண்டு கொண்டார். அவர் கண்களிலே இரக்கம் தோன்றிற்று. யாரே! அதை அடித்து எலும்பை ஒடித்திருக்கிருர்கள் என்று அவருக்குச் தெரிந்துவிட்டது. நல்ல வேளையாக கால் எலும்பு ஒவ்வொன்றும் இாண்டு துண்டாக முரிந்ததே ஒழிய அவை நொறுங்கிப் போகவில்.ே அதை அறிந்ததும் துறவிக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது அவர் தம்மிடத்திலிருந்த சிறிய கத்தியைக் கொண்டு ஓடைக்கு பக்கத்திலே வளர்ந்திருந்த மூங்கிலொன்றை வெட்டி எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/35&oldid=840596" இலிருந்து மீள்விக்கப்பட்டது