பக்கம்:சூரப்புலி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வில்லேயா ? அப்படியால்ை இனிமேல் உனக்கு முன்னலேயே நான் வரவில்க்ல; பயப்படாதே" என்று சொல்லிவிட்டு மறுபடியும் அவர் குரப்புலியைத் தட்டிக்கொடுத்தார். இதற்குள் கட்டெல்லாம் கட்டி முடிந்துவிட்டது. அவர் தமது கையிலுள்ள கத்தியைக்கொண்டு. சூரப்புலியின் வாயிலும் உடம்பிலும் கட்டியிருந்த கட்டுகளையெல்லாம் அறுத்தெறிந்தார். வாயிலுள்ள கட்டை அறுக்கும் முன்னதாகவே கழுத்தில் கட்டியிருந்த கயிற்றையும் அறுத்துவிட்டார். பிறகு வேகமாக அவர் அந்தக் குகையைவிட்டு வெளியேறிவிட்டார். சூரப் புலி குகைக்குள்ளேயே படுத்துக் கிடந்தது. இப்பொழுதும் அதல்ை எழுந்திருக்க முடியவில்லை. வலியும் தணியவில்லே. அனர்த்திக் கொண்டே சூரப்புலி படுத்துக்கிடந்தது. வெளியே உடைந்து கிடந்த பெரிய பானே ஓடுகள் இரண்டைத் துறவி எடுத்து வந்தார். தம் தோளிலே தொங்கிக்கொண்டிருந்த சோற்று மூட்டையை அவிழ்த்து ஓர் ஓட்டிலே கொட்டினர். மற்ருேர் ஒட்டிலே ஓடையிலிருந்து தண்ணிர் கொண்டுவந்தார். இரண்டையும் சூரப்புலியின் அருகே கொண்டுவந்து வைத்துவிட்டு வேகமாக வெளியே வந்து மறைந்துவிட்டார். அன்று இரவு அவர் பட்டினிஆனால், துன்பப்படும் ஓர் உயிருக்கு உதவி செய்த மகிழ்ச்சியோடு: அவர் அங்கிருந்து மறைந்தார். அடுத்த நாள் மாலையிலும் இருள் பரவுகின்ற சமயத்தில் அவர் எங்கிருந்தோ அங்கு வந்தார். கையிலே உணவு மூட்டை இருந்தது. அவர் தம் முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு குகைக்கு முன்லிைருந்துகொண்டே உணவு மூட்டையை அவிழ்த்து உள்ளே போட்டார். தாம் கொண்டுவந்திருந்த கமண்டலத்தில் தண்ணிர் எடுத்துவந்து ஒட்டில் ஊற்றினர். இருள் பரவிக்கொண்டதாலும், துறவி தம் முகத்தை மூடியிருந்ததாலும் அவரை இன்னரென்று சூாப் புலி கண்டுகொள்ளவில்லே. ஆனல், முந்தின நாள் வந்தவர்தான் என்று மட்டும் உணர்ந்தது. இவ்வாறு பல நாட்கள் நடந்தன. முதலில் சில நாட்கள் மட்டும் துறவியின் உருவம் குகைக்கு முன்பு தோன்றியபோது சூரப்புலி குரைத்தது. பிறகு குரைப்பதை நிறுத்திவிட்டது. இந்த மனிதல்ை தனக்கு ஆபத்தில்லை என்று மட்டும் அது தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இருந்தாலும் மனித இனத்தைப்பற்றி அதற்கிருந்த கோபம் ஆறிவிட்டதாகச் சொல்லமுடியாது. மனித இனத்தையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/37&oldid=840598" இலிருந்து மீள்விக்கப்பட்டது