பக்கம்:சூரப்புலி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அறிந்துகொள்ளவும் அதல்ை முடிந்தது. கானகத்து மையிருட்டிலும் அது இப்பொழுது நன்ருகப் பார்த்தது. காற்றில் வருகின்ற வாடையைக்கொண்டே எந்த விதமான பிராணி தூரத்திலிருக்கிறது என்பதையும் அது அறிந்துகொள்ளும். இவ்வாறு சக்தியெல்லாம் பெற்று, நல்ல உடற்கட்டும் காளைப் பருவத்தின் கம்பீரமும் கொண்டு அது மிடுக்கோடு விளங்கிற்று. மேலும், கானக வாழ்க்கையால் அது எத்தனையோ அனுபவங் களேயும் ஆற்றலேயும் பெற்றது. தந்திரம், வஞ்சகம், அஞ்சா நெஞ்சம், குரூரத் தன்மை, இரக்கமின்மை - இப்படி எல்லாம் அதற்கு அமைந்துவிட்டன. அது மனிதைேடு பழகிய நாள்களேயே மறந்து காட்டு விலங்காகவே மாறிவிட்டது. மனிதனிடத்திலேற்பட்ட வெறுப்பும் ஆத்திரமும் மட்டும் மாறவேயில்லை. இப்பொழுது காட்டுக்குள்ளே யாராவது மனிதன் அதற்கு முன்னல் வந்திருத்தால் நிச்சயம் அவனக் கடித்துக் கொல்லாமல் விடாது. குகைக்குத் திரும்பும் போதெல்லாம் மனிதன்மேல் ஏற்பட்டிருந்த வெறுப்பு வளர்ந்துகொண்டே யிருந்தது. சில இரவுகளில் அது குகைக்குள்ளே தனியாகப் படுத்துத் தூக்கம் வரும் வரையில் பகலிலே நடந்த சம்பவங்களைப்பற்றி நினத்துக்கொண்டிருக்கும். அன்றைய சம்பவங்களிலிருந்து மெது வாகப் பழைய வாழ்க்கையைப்பற்றிய நினைப்பும் வரும், பவானி ஆற்றில் வந்த வெள்ளத்தைப்பற்றியும், பாக்கு வியாபாரியின் மாளிகை யிலே தன் வாழ்க்கையைப்பற்றியும் அது எண்ணிக்கொண்டிருக்கும். அந்தச் சடைநாயை ஒரு நாள் பழிவாங்க வேண்டும் என்ற கோபமும் அப்போது உண்டாகும். உருளைக்கிழங்கு மண்டியிலே இருந்த காவல்காரர்களைப்பற்றியும் நினைக்கும். அதே சமயத்தில் தாடிக்கார அடைய நினைவு வந்து அது குமுறும். அதன் கண்களிலே கோபக் கனல் கொழுந்துவிடும். இவற்றிற்கு மத்தியிலே அந்தத் துறவியைப்பற்றிய நினவும் சில வேண்களில் வராமற் போகாது. அந்த மனிதனப்பற்றி அது ஒரு தனிப்பட்ட ஆச்சரியத்தோடு யோசித்துப் பார்க்கும். அவன் எதற்காக அதனிடத்திலே அன்பு காட்டின்ை ? மனிதரெல்லாம் அதற்குத் துன்பமே கொடுத்தார்கள். பாக்கு வியாபாரியின் மகனை சிறு பையன்கூடத் துன்பமே செய்தான். இந்த மனிதன் எதற்கு வேறு விதமாக நடந்தான் ? அவன் எதற்காக அதன் எலும்புகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/40&oldid=840602" இலிருந்து மீள்விக்கப்பட்டது