பக்கம்:சூரப்புலி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சிலிர்த்துக்கொண்டு உடம்பெல்லாம் முள்ளாக நின்றதைக் கண்டு சூரப்புலி பின்வாங்கியது. முள் தைத்த இடமெல்லாம் வலியெடுத்தது. அதல்ை முள்ளம்பன்றியை எதிர்த்து நிற்காமல் குகைக்கு ஓடி வந்துவிட்டது. அங்கே வந்து முட்களையெல்லாம் வாயில் கவ்வியும், கால்களால் தள்ளியும் எடுக்க முயன்றபோது துறவியின் நினப்பு அதற்கு அதிக மாயிற்று. அந்த மனிதர் இப்பொழுது பக்கத்திலிருந்தால் முள்ளே யெல்லாம் பிடுங்கிவிடுவதோடு காயத்திற்கு மருந்தும் போடுவார் என்று அது நினைத்தது. துறவியின் மேலாடையில் கிழித்த சில துணிகள் குகைக்குள்ளே கிடந்தன. அவற்றைச் சூரப்புலி நன்ருக முகர்ந்து பார்த்தது. அந்த மாதிரி மோப்பம் பிடித்து அவரைக் கண்டு பிடிக்க நினத்தது. அவர் பக்கத்திலேயே எங்காவது இருப்பாரென்று எண்ணி நாள்தோறும் சுற்றுப்புறமெல்லாம் தேடித் தேடி அந்ைதது. ஒருநாள் இவ்வாறு ஓடிக்கொண்டே அது வெகு தூரம் சென்று விட்டது. இதுவரையிலும் காணுத சிறிய ஆறு ஒன்று அங்கே தென்பட்டது. அதன் கரை ஓரமாகவே சூரப்புலி நீண்ட நேரம் ஒடிற்று. கடைசியாகத் திரும்பலாம் என்று நினைக்கும் சமயத்தில் ஆற்றின் கரையிலே நல்ல அழகான இடத்திலே ஒரு பர்ணசால் கண்ணுக்குப் புலப்பட்டது. சூரப்புலி அதனருகே சென்றது. யாரும் அங்கிருக்கவில்லை. அதல்ை அது மெதுவாகப் பர்ணசால்க் குள் நுழைந்தது. உள்ளேயும் யாரும் இல்லை. அது காலியாக இருந்தது. சில கிழிந்த துணிகள் மட்டும் அங்குமிங்கும் கிடந்தன. அவற்றைச் சூரப்புலி முகர்ந்து பார்த்தது. அவை அந்தத் துறவிக்குக் சொந்தமானவை என்று அதற்குத் தெரிந்துவிட்டது. அதல்ை அது அங்கேயே இருந்தது. துறவியைச் சந்திக்கத் தீர்மானித்தது. இரவு சூழ்ந்தது. ஆனல் யாரும் அங்கு வரவில்லை. குணப்புலி பர்ணசால்க்குள்ளேயே படுத்துக்கொண்டிருந்தது. பர்ணசாலேயிலேயே சூரப்புலி இரவு முழுவதும் படுத்திருந்தது மறுநாள் மால் வரையிலும் அந்தப் பக்கத்திலேயே அங்குமிங்கும் உலாவிற்று. எப்படியாவது அந்தத் துறவியைக் காணவேண்டு மென்று அதற்கு ஆசை. ஆனல், மா ைவரையிலும் அங்கு யாரும் வாவில்லே. அதல்ை மேலும் அங்கேயே இருந்து துறவியைக் கான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/42&oldid=840604" இலிருந்து மீள்விக்கப்பட்டது