பக்கம்:சூரப்புலி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முடியாதென்று அதற்குத் தோன்றியது. அவர் வேறெங்காவது போயிருக்கலாம். அல்லது இருக்கையை மாற்றிக்கொண்டிருக்கலாம். இவ்வாறு நினைத்துக்கொண்டே சூரப்புலி அவரைத் தேடிப்போக எண்ணிற்று. பர்ணசாலைக்குள் சென்று நன்ருக மோப்பம் பிடித்தது. பிறகு, அவருடைய காலடி சென்றுள்ள பக்கமாக மோப்பம் பிடித்துக் கொண்டே சென்றது. ஆற்றை அடையும் வரையில் அதற்கு எவ்: விதச் சந்தேகமும் ஏற்படவில்லை. அதுவரையிலும் நிச்சயமாக மோப்பம் பிடிக்க முடிந்தது. அதற்குமேல் கரையோரமாக மேலும் கீழும் ஓடிப்பார்த்தது. கொஞ்ச தூரத்திற்கு மோப்பம் கிடைத்ததே. ஒழிய அதற்குமேல் ஒன்றும் புலனுகவில்லை. துறவி கரையோரமாக மேல்நோக்கியோ கீழ்நோக்கியோ செல்லவில்லே என்பது தெரிந்து விட்டது. அதல்ை அவர் ஆற்றைக் கடந்துதான் போயிருக்க வேண்டும். சூசப்புலி ஆற்றில் குதித்தது. ஆற்றில் ஆழம் அதிகமில்ல். அதல்ை நடந்தே அக்கரைக்குச் செல்ல முடிந்தது. அக்கரை சென்றதும் சூரப்புலி மீண்டும் மோப்பம் பிடித்துத் துறவி சென்ற சிறிய கால்நடைப் பாதையைக் கண்டு பிடித்துவிட்டது. அந்தப் பாதை குறுகலாக இருந்தாலும் அடிக்கடி பலர் நடந்த காரணத்தால் நன்ருகத் தெரிந்தது. அதன் வழியாகவே சூரப்புலி வேகமாக ஒடிற்று. ஆல்ை, இருள் பரவ ஆரம்பித்ததும் அது வேகத்தைக் குறைத்துக்கொண்டு காலடிச் சத்தம் கேட்காதவாறும், சுற்றுமுற்றும் பார்த்து எச்சரிக்கையோடும் நடக்கத் தொடங்கியது. போகப் போகக் காட்டின் அடர்த்தி குறையலாயிற்று. சில இடங்களில் மரங்களே இருக்கவில்லை; சில குற்றுச்செடிகளும் மலைப்புல்லுமே இருந்தன. அவற்றின் வழியாகப் போய்க்கொண்டிருக்கும்போது மெதுவாக எதுவோ அதிர்வது போல ஓசை கேட்டது, இன்னும் கொஞ்ச தூரம் போன போது அந்த ஓசை தடதடவென்று அதிகமாயிற்று. இதுவரையிலும் சூரப்புலி பல வகையான காட்டு ஒலிகளைக் கேட்டிருக்கிறது; அவை எப்படி அல்லது எதல்ை உண்டாகின்றனவென்றும் அ த ற் கு த் தெரியும். சிறிய ஒலியிலிருந்தும் அது பிராணிகளே அறிந்துகொள்ளும். ஆனல் இது போன்ற இடைவிடாத பெரிய ஓசையை அது இன்று வரையிலும் கேட்டதில்லை. அதனால், மேலே நடவாமல் தயங்கி நின்றது. அடுத்த நாள் பகல் வெளிச்சம் வருமுன் இனி அடியெடுத்து வைக்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/43&oldid=840605" இலிருந்து மீள்விக்கப்பட்டது