பக்கம்:சூரப்புலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 .டாது என்று அதற்குத் தோன்றிற்று. உடனே அங்கே ஒரு மறைவான புதரைக் கண்டுபிடித்து அதற்குள்ளே சென்று மெதுவாகப் படுத்தது. அப்படிப் படுத்ததும் அதற்குப் பழைய நினைவு வந்தது. முதன் முதலாக அது கானத்தில் புகுந்து ஒரு புதரிடையே இப்படித் தானே படுத்தது ? அந்த நினைவு வந்ததும் அதற்குத் தூக்கம் பிடிக்க வில்லை. விழித்துக்கொண்டே எச்சரிக்கையோடு விடியுமளவும் படுத்திருந்தது. காலேயிலே சூரிய கிரணங்கள் காட்டில் புகுந்து எங்கும் வெளிச் சம் ஏற்பட்டவுடன் சூரப்புலி மேற்கொண்டு தனது பிரயாணத்தைத் தொடங்கிற்று. வரதர தடதடவென்று அதிரும் ஓசை அதிகமா பிற்று. ஆல்ை, இரவிலே ஏற்பட்டது போன்ற அச்சம் இப்பொழுது எற்படவில்லை. எனினும் சூரப்புலி எச்சரிக்கையோடு சென்றது. இப்பொழுது காதைத் தொளேக்கும்படியாகப் பேரிரைச்சல் கேட்கலாயிற்று. ஆனல் சிறிய பறவைகளேயும் புனுகுபூனே முயல், போன்ற சிறிய விலங்குகளையும் தவிர வேறு பெரிய பிராணிகளின் அறிகுறியே தெரியவில்லே. சூரப்புலி ஆச்சரியப்பட்டுக்கொண்டே. அடியெடுத்து வைத்தது. ஒரு திருப்பத்திற்கு வந்து புதர் மறைவிலிருந்து இடப்பக்கமாகத் திரும்பும்போது திடீரென்று ஒரு மல்யருவி கண்ணுக்குத்தோன்றிற்று. பர்ணசாலேக்குப் பக்கத்தில் ஒடிய அதே சிறிய ஆறு அங்கு ஒரு பாறையிலிருந்து கீழே அருவியாகச் சுமார் 15 அடி உயரத்திற்கு விழுந்துகொண்டிருந்தது. அந்த அருவியே தடதடவென்று ஒசை புண்டாக்குகிறது என்று சூரப்புலிக்குத் தெரிந்ததும் அது தன் சந்தேகத்தையெல்லாம் விட்டுவிட்டு வேகமாகக் கீழே செல்லலா யிற்று. அருவியின் கீழ்ப்பகுதியிலே ஓரிடத்தில் அகன்ற பாறையொன்று சற்று உயரமாக ஒரு மேடையைப்போல அமைந்திருந்தது. அதன் மீது ஒரு காவி நிறமான பை அவிழ்ந்தே கிடந்தது. சூரப்புலி அப்பையை முகர்ந்து பார்த்து, அது துறவிக்குச் சொந்தமான தென்று கண்டுகொண்டது. உடனே, அது ஆவலோடு பைக்குள் தக்லயை விட்டுப் பார்த்தது. அதிலே சில புத்தகங்களும், ஒரு சிறிய கத்தியும் இருந்தன. அந்தக் கத்தியால் மூங்கில் பத்தைகளைச் சீலித் தன் கால்களில் வைத்துக் கட்டியதை சூசப்புலி உணர்ந்து. கொண்டது. ஆதலால், துறவி அங்கேதான் பக்கத்தில் எங்காவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/44&oldid=840606" இலிருந்து மீள்விக்கப்பட்டது