பக்கம்:சூரப்புலி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இருப்பாரென்று அது மகிழ்ச்சியோடு அங்குமிங்கும் சுற்றி: பார்த்தது. துறவியை எங்கும் காணுேம். அங்கிருந்து மலே: காட்டைவிட்டுக் கீழிறங்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதையிலே அவ சென்றிருக்கவேண்டும் என்று மட்டும் அது மோப்பத்தால் அறிந்து கொள்ள முடிந்தது. இருந்தாலும் அதற்கு ஒரு வினை ஆசை. மறுபடியும் பர்ணசாலைக்குப் போனல் அங்கே ஒரு வேளை அந்தத் துறவி இருப்பாரோ ? பையை எடுத்துக்கொண்டு போய் அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று அது விரும்பிற்று. உடனே, வாயில் பையை நன்ருகக் கவ்வி, அதனுள்ளிருக்கும் பொருள்கள் கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு, வந்து வழியிலேயே வேகமாகத் திரும்பிப் பர்ணசால்க்குச் சென்றது. சூரப்புலி எதிர்பார்த்ததுபோலத் துறவி அங்கிருக்கவில்லே. அது பர்ணசாலேக்குள் ஒரு மறைவிடத்தில் பையை வைத்துவிட்டு மீண்டும் அருவியை நோக்கிப் புறப்பட்டது. தூரத்திலேயே அருவியின் ஒன்சயைக் கேட்டு இந்த முறை அது பயமடையவில்க். அருவியை அடைந்ததும் நாலாயக்கமும் ஆவலோடு மீண்டும் சுற்றிப் பார்த்தது. பிறகு ஒற்றையடிப்பாதை வழியாக அது மலேக்காட்டை விட்டுக் கீழிறங்கி நடக்கலாயிற்று. கொஞ்சங்கொஞ்சமாக நிலத்தின் தன்மை மாறிக்கொண்டே வந்து கடைசியில் பயிர்செய்யும் நிலப் பகுதியே வந்துவிட்டது. சூரப்புலி மோப்பம் பிடித்துக்கொண்டே தொடர்ந்து சென்றது. துறவியைக் கண்டுபிடிக்காமல் திரும்புவ தில்க் என்ற உறுதி அதன் உள்ளத்திலே ஏற்பட்டிருக்கவேண்டும். அன்று கதிரவன் மறைந்து இருள் கூடுகின்ற சமயத்திலே அது மேட்டுப்பாக்ாயம் வந்து சேர்ந்தது. அங்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வரிசையாக எழுந்தன. அதன் இளமைப்பருவ நிகழ்ச்சிகள் அந்த ஊரில்தானே நடந்தன ? சூரப்புலி பல வீதிகளின் வழியாக யாதொரு நோக்கமுமில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தது. அங்கு வந்த பிறகு துறவியின் அடிச்சுவடுகளே மோப்பம் பிடித்து அறியமுடியவில்லே, காட்டுப்பாதையிலே நடமாட்டம் அதிகமாக இராததால் மோப்பம் பிடிப்பது சாத்தியமாயிற்று. இங்கு மக்கள் நடமாட்டம் அதிகம். துறவி அந்த வழியாகச் சென்று சில நாள்கள் ஆகியிருக்க வேண்டும். அதனல், சூரப்புலியின் மிக நுட்பமான மோப்பம் பிடிக்கும் சக்தியும் பயன்படவில்லே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/45&oldid=840607" இலிருந்து மீள்விக்கப்பட்டது