பக்கம்:சூரப்புலி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 மக்களேக் காணப் பிடிக்கவில்லை. மனித இனத்தின் மேலேயே அதற்கு வெறுப்பு ஏற்பட்டிருந்ததல்லவா ? அதனல், அருகிலே யாராவது வந்துவிட்டால் அது உர்’ என்று உறுமும். அடுத்த நொடியிலே அவர்கள்மீது பாயவும் தயாராக இருக்கும். ஆனல் அப்படிப் பாயவேண்டிய அவசியம் நேரவில்லை. அதன் தோற்றத்தை யும் சீற்றத்தையும் கண்டதுமே மக்கள் ஓட்டம் பிடித்தார்கள். அவர் கள் செய்கையைக் கண்டு சூரப்புலி ஆச்சரியம் அடைந்தது. இவ்வாறு சுமார் இரண்டு மைல் தூரம் சென்ற பிறகு, சாலேயின் ஒரு பக்கத்திலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஒரு கூட்டத்தார் தாங்கள் கொண்டுவந்திருந்த கட்டுச்சாதத்தை எடுத்துவைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். முந்திய நாள் முதல் சூரப்புலி பட்டினி. அதற்குப் பசியெடுத்தது. அதனுல் அது அந்தக் கூட்டத் திற்குள்ளே கம்பீரமாக நுழைந்தது. அதைக் கண்டதும் எல்லோரும் சாதத்தை எறிந்துவிட்டு ஓட்டம் பிடித்தனர். சூரப்புலிக்கு நல்ல விருந்து கிடைத்தது. அதை உண்ணும்பொழுதே குரப்புலி, மனிதன் தன் கையில் தடியோ மற்ற ஆயுதமோ வைத்திருக்காவிட்டால் சக்தியற்றவன் என்று உணர்ந்துகொண்டது. தடி கையிலில்லாத மனிதனத் தன் விருப்பம் போலத் தாக்கி மடக்கிவிடலாம் என்று அது தெரிந்துகொண்டது. இந்த உணர்வு வந்ததும் அது மனிதனிடம் பயப்படுவதை விட்டுவிட்டதோடு அவனிடம் வெறுப்புக்கொள்வதை யும் மறந்துவிட்டது. ஆல்ை தாடிக்காரன் மேலிருந்த வெறுப்பு மட்டும் மாறவில்லே. அவனத் தவிர மற்றவர்களைத் தனக்கு எதிரியாக நினைப்பதே இழிவானது என்று அதற்குத் தோன்றிற்று. மற்றவர் களெல்லாம் அதற்குப் பயந்தவர்கள்தாமே ? இந்த நினைப்போடு அது உணவை முடித்துக்கொண்டு மேற் கொண்டு நடந்தது. மேட்டுப்பாளையத்திலிருந்து இவ்வாறு ஆறு மைல் சென்று சூரப்புலி காரமடையை அடைந்தது. அந்த ஊருக்கு அருகில் போகப் போக மக்களின் கூட்டம் மிக நெருக்கமாக இருந்தது. அன்று அங்கே தேர்த்திருவிழா. அந்த ஊரிலுள்ள புகழ்பெற்ற ரங்கநாதருடைய பெரிய திருவிழா. ஆயிரக்கணக்கில் வண்டிகளும் மற்ற வாகனங்களும் வந்திருத்தன. ஆண்களும் பெண்களும் திரள் திரளாக நெருக்கியடித்துக்கொண்டு அங்குமிங்கும் சென்றுகொண் டிருந்தனர். சிறுவர்கள் வாயில் வைத்து ஊதுகின்ற ஊதிகளின் பல்வேறுவகைப்பட்ட ஒலிகளும், தப்பட்டை, கொம்பு முதலிய வாத்தியங்களின் ஒலிகளும் எங்கும் கேட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/48&oldid=840610" இலிருந்து மீள்விக்கப்பட்டது