பக்கம்:சூரப்புலி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சூரப்புலி இத்தனே பெரிய மனிதக் கூட்டத்தைக் கண்டதேயில்லேஇருந்தாலும் அதற்கு இப்பொழுது அச்சம் தோன்றவில்க்ல. அதைக் கண்டுதான் மக்கள் பயந்து பயந்து விலகிப் போனர்கள். சூரப்புலி அவர்களுக்கிடையே கம்பீரமாக நடந்தது. எங்குப் பார்த்தாலும் வேடிக்கை விநோதங்களும், எமாற்று வித்தைகளும் நடந்தன. இப்படிப்பட்ட திருவிழாக் கூட்டத்திலே பிச்சைக்காரர்களுக்குப் பஞ்சமே இருக்காது. அது ஓரிடத்திலே, ஒரு கண்ணில்லாத கபோதி கையேந்திக்கொண்டு நிற்பதைப் பார்த்தது. அவனுக்குப் பக்கத்திலே ஒரு தடிப்பையன் தின்றுகொண்டிருந்தான். அவ னுடைய தோள்மீது கையை வைத்துப் பிடித்துக்கொண்டுதான் குருடன் நடந்தான். அவனில்லாவிட்டால் குருடல்ை ஒன்றும் செய்ய முடியாது என்று சூரப்புலிக்குத் தெரிந்தது. குருடன், 'ஐயா, இந்தக் கண்ணில்லாத ஏழைக்கு ஒரு காசு. போடுங்கள்' என்று உரத்துக் கூவிக்கொண்டிருந்தான். அவன் குரலிலே துயரம் கலந்திருந்தது. தடிப்பையன் அவனுக்காகக் கவலேப்படுவதாகத் தெரியவில்லே. குருடன் பிச்சை வாங்கும் காசைக் கொண்டு அவன் நன்ருகத் தின்று கொழுத்திருந்தான். தன்ன விட்டால் குருடனுக்குக் கதியில்லேயென்று அவன் தெரிந்துகொண்டு அவன் குருடனேத் தன் விருப்பம்போல ஆட்டிவைத்துக்கொண்டிருந்: தான். அந்தப் பையனிடத்திலே எப்படியோ ஆரம்பத்திலேயே சூரப் புலிக்கு வெறுப்பும் குருடனிடத்தில் அன்பும் ஏற்பட்டன. திருவிழாவுக்கு வந்த சிலர், தாங்கள் உண்டு மீதியாக இருந்த, சோற்றைக் குருடன் கையிலே கொடுத்துச் சென்ருர்கள் ; சிலர், வாழைப்பழம் கொடுத்தார்கள். அந்தத் தடிப்பையன் பழங்களை யெல்லாம் குருடன் கையிலிருந்து எடுத்துத் தானே ஒன்றுவிடாமல் தின்றுவிட்டான். சுவை மிகுந்த சோற்றையும் தன் வாயில் போட்டுக் கொண்டு குருடனுக்கு எஞ்சியவற்றைக் கொடுத்தான். குருடனுக்கு, அவனிடம் கோபித்துக்கொள்ள முடியாது. அதல்ை ஏதோ கிடைத்ததைத் தின்று அவன் பசியைத் தணித்துக் கொண்டான். சூரப்புலி மெதுவாகக் குருடனுக்குப் பக்கத்திலே சென்று அவன் காலருகில் நின்றது. நாயைப் பாருடா, ரொம்ப சொந்தங். கொண்டாடுது. உதை போகட்டும்' என்று தடிப்பையன் அதட்டின்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/49&oldid=840611" இலிருந்து மீள்விக்கப்பட்டது