பக்கம்:சூரப்புலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 னில்லாமல் ஊரைச் சுற்றி எச்சில் பொறுக்கித் திரியும் நாயை யார் மதிக்கிருர்கள் ? சுற்றிச்சுற்றித் திரிந்து அதற்கு ஒரே அலுப்பு. இரண்டு நாட்களாகப் பட்டினி. அதல்ை பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த நாய்க்குட்டி, அதற்குமேலே எங்கும் போக முடியாமல் அப்படியே அந்த மாளிகை வாயிலருகே படுத்துவிட்டது. தெருவழியே போகிறவர்களுக்கு அந்த நாய்க்குட்டி அந்தப் பெரிய மாளிகையைச் சேர்ந்தது என்றுதான் நினக்கத் தோன்றும். ஆல்ை அது ஆதரவற்ற அைைத. வாவென்று அன்போடு கூப்பிடுவதற்கு அதற்கு ஒருவரும் இல்லே. அது களேப்பில்ை மேலும் ஓடமுடியாமல் அப்படியே படுத்துக் கிடந்தது. கொஞ்ச நேரத்தில், அந்தப் பெரிய மாளிகைக்குள்ளிருந்து ஒரு பயங்கரமான சடைநாய் வெளியே ஓடி வந்தது. வாயிலருகே படுத்துக்கிடந்த நாய்க்குட்டியைக் கண்டதும் அது உர்ரென்று கோபத்தோடு உறுமிற்று. எழுந்திருக்கவே சக்தியில்லே என்ருலும் உயிருக்கே ஆபத்து என்ருல் எங்கிருந்தோ ஒரு வேகம் வந்துவிடு கிறதல்லவா ? அந்த நாய்க்குட்டி வாலே இடுக்கிக்கொண்டு எழுந்து, வீல்' என்று கத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தது. சடைநாய்க்குப் பின்னலேயே மாளிகைக்குள்ளிருந்து வந்த சிறுவன் ஒருவன் அதன் ஓட்டத்தைக் கண்டு கைகொட்டிச் சிரித்தான். பிறகு சடைநாயைப் பார்த்து, சடையா, உள்ளே போ” என்று உத்தரவிட்டான். சடையனும் அந்த உத்தரவிற்குப் பணிந்து மாளிகைக்குள்ளே சென்று, ஒரு சாய்வு நாற்காலிக்கு அருகில் கம்பீரமாகப் படுத்துக் கொண்டது. கால்களுக்கிடையே வால் இடுக்கிக்கொண்டும் பயந்து அலறிக் கொண்டும் ஒடுகின்ற அந்த நாய்க்குட்டியின்மேல் சிறுவனுக்கு நோட்டம் விழுந்துவிட்டது. அதை மாளிகைக்குள் கூப்பிட்டால் மறுபடியும் சடையன அதன்மேல் பாயவிட்டு வேடிக்கை பார்க்கலா மல்லவா ? அதல்ை சிறுவன் அந்த நாய்க்குட்டியை மெதுவாக, "த்சோ த்சோ வா’ என்று கூப்பிட்டான். இப்படிக் கூப்பிடுவதைத் தான் அது இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/5&oldid=840612" இலிருந்து மீள்விக்கப்பட்டது