பக்கம்:சூரப்புலி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விடுவான். மறுநாள் காலேயிலே சேரறு வாங்கச் செல்வதற்கு அவன் குருடனே அழைத்துச் செல்ல மறுப்பான். குருடன் கெஞ்சிக் கொஞ்சிப் பேசி அவனச் சமாதானப்படுத்தவேண்டும். அவன் விட்டால் ருருடனுக்கு வேறு வழி மற்ருெரு பையனேத் தேடிப்பிடிக்க அவளுல் முடியாது. இந்தப் பையனே தாகை வந்து சேர்ந்தவன். தடிப்பையன் சினிமாவுக்குப் போவதில் ஒரு நாள் தவற மாட்டான். அங்குப் போகவே ஒரு தனி உடுப்பு அவனுக்குண்டு. குருடன் கொடுக்கிற எட்டணுவுக்கு மேலாக இவனே குருடன் கையிலிருந்து ஏமாற்றி எடுத்துக்கொள்கிற பணமும் உண்டு. பிச்சை போடுகிறவர்களுக்குச் சில்லறை மாற்ற வேண்டுமானுல் குருடன் கையிலிருக்கிற காசை அந்தப் பையன்தான் எடுத்துக்கொடுப்பான், சில்லறை கொடுக்கும் பாவனையில் சில காசுகளையும் தட்டிக்கொள்வான். இவ்வாறு, குருடனுடைய பிச்சையால் பிழைத்தாலும் அவன் செய்கின்ற குறும்புகளுக்கும் பேசுகின்ற விதண்டாவாதப் பேச்சு களுக்கும் அளவே இராது. சினிமாவில் பார்த்துவந்த பல மோசடி வித்தைகளையும் அவன் குருடனிடத்தில் காட்டுவான். அவற்றை யெல்லாம் குருடன் பொறுமையோடு சகித்து வந்தான். தினமும் பையன் சினிமாவுக்குப் போவதால் குருடன் அவன் இரவு 10 அல்லது 11 மணிக்குத் திரும்பும் வரையில் கடைவீதியிலே ஒரு மூலயில் குந்திக்கிடப்பான். பையன் திரும்பிய பிறகுதான் அவன் தங்குமிடமாகிய பாழடைந்த சத்திரத்திற்குச் செல்லமுடியும் அதுவரையிலும் குருடன் பசியோடு கிடப்பான். சத்திரத்திற்குப் போனபிறகுதான் காலேயில் பிச்சையெடுத்துவந்த உணவில் மீதியிருப் பதை அவன் உண்பான் ; சூரப்புலிக்கும் போடுவான். தடிப்பையன் மாலேயிலேயே வயிறு புடைக்கச் சுண்டலும், வடையும் தின்றிருப்ப தால் அவன் இரவில் சாப்பிடமாட்டான். மேலும், பழைய சோறு அவனுக்குப் பிடிக்காது. பல இரவுகளில் சாயா குடிக்கவேண்டு மென்று மேலும் கொஞ்சம் காசைப் பிடுங்கிக்கொண்டு போவான். பிறகு, கால நேரம் வரையில் அவனேக் காணமுடியாது. குருடனுக்குச் குரப்புலிதான் துணையாகப் பக்கத்திலிருக்கும். குருடன் சூரப்புலியை அன்போடு அணத்துக்கொள்வான் நீ வாயில்லாச் சீவன் நான் கண்ணில்லாச் சீவன். உனக்கு நான் துண, எனக்கு நீ துனே" என்று பரிவோடு அதனிடம் பேசுவான். அவன் காட்டும் அன்பிலே சூரப்புலி ப்ெரிதும் மகிழ்ச்சியடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/53&oldid=840616" இலிருந்து மீள்விக்கப்பட்டது