பக்கம்:சூரப்புலி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 இவ்வாறு ஒரு மாதம் சென்றது. தடிப்பையனுடைய குறும்பு கள் அதிகமாகிக்கொண்டே இருந்தன. குருடனே அவன் அலட்சிய மரகத் தன் விருப்பம்போல ஆட்டிவைப்பதைக் கண்டு சூரப்புல் உள்ளுக்குள்ளே கோபமடைந்தது. சில சமயங்களிலே அது பையனப் பார்த்து உறுமும் கோபத்தோடு அவனப் பார்க்கும்: ஆல்ை அவன் இதைப்பற்றிக் கவலைப்படவில்லை. ஒருநாள் குருடனுக்குக் காய்ச்சல் கண்டது. அவனுல் எழுந்திருக்கவே முடியவில்லே. காகலயில் எப்படியோ சிரமப்பட்டுக் காய்ச்சலோடே சென்று சோறு வாங்கி வந்தான். ஆனல் அதை அவன் தொடவேயில்லே. காய்ச்சலரல் அவன் மயங்கிப் படுத்திருந் தான். தடிப்பையன்தான் சோற்றைத் தின்ருன். அன்று புதிதாக ஒரு தமிழ்ச் சினிமாப்படம் வந்திருந்தது. முதல் நாளிலேயே அதைப் பார்க்க வேண்டுமென்று அவன் தீர்மானித்துவிட்டான். அதல்ை அன்று பகல் 2 மணிக்கே குருடனேக் கடைவீதிக்குப் புறப்படும்படி வற்புறுத்தின்ை. 'என்னல் எழுந்திருக்கவே முடியவில்லே' என்று குருடன் மெதுவாகச் சொன்னன். 'நீ வராவிட்டால் மருந்துக்குக் காசு வேண்டாமா ? வா போகலாம்” என்ருன் பையன். "இன்றைக்கு மருந்தே வேண்டாம். நாளேக்குப் பார்த்துக் கொள்ளலாம்' என்று கவலேயோடு சொன்னன் குருடன். “நாளேக்கா ? நாளேக்கு உனக்கு யமன்தான் கூடவருவான். நான் வரமாட்டேன். உன்னுடைய தொல்லேயே எனக்கு வேண்டாம்' என்று சீறிள்ை தடியன். குருடனுக்கு வேறு வழியில்லை. தட்டுத் தடுமாறி எழுந்து பையன் பின்னலேயே கடைவீதியை நோக்கி நடந்தான். குருடன் கையில் ஐம்பதுகாசு சேர்ந்தவுடனே பையன் அதை எடுத்துக் கொண்டு வேகமாகப் புறப்பட்டான். மருந்து வாங்கி வரவா போகிருப் ?' என்று குருடன் ஆபாசத்தோடு கேட்டான். பதில் கூறுவதற்குப் பையன் அங்கில்லே. சினிமாவுக்கு நேரமாகிவிட்டது. புதிய படம் ஆரம்பிக்கும் முதல் நாளாகையால் கூட்டம் அதிகமாக இருக்கும். அதல்ை, விழுந்தடித்துக்கொண்டு முன்னல் போப் டிக்கட் வாங்க வேண்டும். அதல்ை, அவன் ஓடிப்போப்விட்டான். பதில் ஒன்றும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த குருடன் சோர் வோடு நிலத்தில் சாப்ந்தான். வயது முதிர்ந்த அவன் தோற்றம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/54&oldid=840618" இலிருந்து மீள்விக்கப்பட்டது