பக்கம்:சூரப்புலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கன்னம் ஒடுங்கி வயிருெட்டிப் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது. நிக்லமையை உணர்ந்துகொண்ட சூரப்புலி அவனருகிலே வந்து அன்போடு அவன் முகத்தை நக்கிற்று. அவன் உடம்பு காய்ச்சலால் கொதித்துக்கொண்டிருந்தது. "அம்மா அப்பா " என்று அனர்த்திக் கொண்டே குருடன் படுத்திருந்தான். பொழுது விழுந்து மின்சார விளக்குகள் கோயம்புத்துார்க் கடை வீதியிலே விதவிதமாகப் பிரகாசிக்கத் தொடங்கின. திடீரென்று மேல்காற்று வீசத் தொடங்கிற்று. வானத்திலே கருமேகங்கள் திரள் திரளாக வந்து கவிந்தன. சுற்றிலும் மின்னல் மின்னிற்று இடி இடித்தது. பெருமழையும் வந்து சடசடவென்று பொழியலாயிற்று. குருடன் மழையில் நனேத்து நடுங்கினன். அடே பையா, எங்கே போய்விட்டாப் வந்து என்னச் சத்திரத் திற்குக் கூட்டிப்போடா " என்று இரக்கத்தோடு கூ வினன். சினிமாக் கொட்டகையில் மற்ற பையன்களோடு சேர்ந்துகொண்டு சீழ்க்கை அடித்தும், ஆடியும் பாடியும் ஆர்ப்பாட்டம் செய்யும் தடியனுக்கு அவன் குரல் கேட்கவா போகிறது ? சூரப்புலி குருடனச் சுற்றிச்சுற்றி வந்தது. பரபரப்பாக அங்குமிங்கும் ஒடிப் பார்த்தது. கோபத்தோடு சீறிக்கொண்டு தடியன் போன திசையைப் பார்த்தது. பிறகு அது வேகமாகக் குருடனிடத்திலே வந்து அவனே வழி நடத்திக் கூட்டி வருவதற்காக உபயோகப்படுத்தும் மூங்கில் தடியை வாயால் கவ்வி எடுத்தது. அதன் ஒரு முண்பைக் குருடன் கையில் வைத்து அழுத்திற்று. குருடன் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். மற்ருெரு முனையை அது தன் வாயில் கவ்விக்கொண்டது. குருடன் சூரப்புலி யையும் மூங்கில் தடியையும் கையால் தடவிப் பார்த்தான். சூரப்புலி வால்க் குழைத்துக்கொண்டும், முறுமுறுத்துக்கொண்டும் தான் புறப்படுவதற்குத் தயாராக இருப்பதாகக் காண்பிக்க முயன்றது. குருடன் அதன் கருத்தை உணர்ந்துகொண்டான். பிறகு தள்ளாடி மெதுவாக எழுந்து நடக்கத் தயாரான்ை. மூங்கில் தடியை வாயில் கவ்விக்கொண்டே சூரப்புலி சத்திரத்தை நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கியது. மழையிலேயே நடந்து குருடன் சத்திரத்தை அடைந்தான். குருடன் அங்குச் சென்று படுத்ததும் சூரப்புலியை அன்போடு கட்டிப்பிடித்து அதன் உச்சியிலே முத்தம் கொடுத்தான். குரப்புலி அவனுடைய அன்பை அறிந்து குதூகலத்தோடு பலவாறு சத்தமிட்டது. தடியன் இரவு முழுவதும் அங்கு வரவில்ல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/55&oldid=840619" இலிருந்து மீள்விக்கப்பட்டது