பக்கம்:சூரப்புலி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

மறுநாள் காலேயில் குருடனேச் சூரப்புலி எங்கோ அழைத்துச் செல் மத் தயாராயிற்று. மூங்கில் தடியைக் கவ்வி எடுத்துக் குருடன் கையில் வைத்தது. குருடன் அதன் எண்ணத்தை அறிந்துகொண்டான். ழங்கில் தடியின் மற்ற நுனியைக் கவ்விக்கொண்டு நடப்பதற்குச் தரப்புலிக்குச் சிரமமாக இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. அதல்ை அவன் ஒரு புதிய எற்பாட்டைச் செய்தான். பழங்கத்தை பாகக் கிடக்கும் அவனுடைய மேல் துண்டை எடுத்து, அதன் ஒரு துனியை சூரப்புலியின் கழுத்திலே சுற்றிக் கட்டின்ை. மற்ருெரு துனியைத் தனது இடக்கரத்திலே சுற்றிப் பிடித்துக்கொண்டான். வலக்கரத்திலே மூங்கில் தடியை ஊன்றிக்கொண்டு நடக்கத் தயாராளுன். இந்த ஏற்பாடு சூரப்புலிக்கு மிகவும் வசதியாக இருந்தது. அது குருடனுக்கு நல்ல பாதையை நடப்பதற்கு விட்டு, அவன் கைக்கு எட்டிய தூரத்தில் அருகிலேயே நடந்தது. வீதிகளைக் கடந்து போகும்போதும் வேறு வீதிகளில் திரும்பும் போதும் ஜாக்கிரதையாகச் சென்றது. அது எங்கு அழைத்துப் போகிற தென்று குருடனுக்குத் தெரியாது. ஆல்ை, அதன் விருப்பப் படியே அதன் பின்னல் செல்லத் தீர்மானித்து அவன் நடந்தான். குரப்புலி அவனேக் கோயம்புத்துர் நகராட்சிக் கழகத்தின் இலவச மருத்துவசால்க்கு அழைத்துச் சென்றது. முன்னுல் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/56&oldid=1276979" இலிருந்து மீள்விக்கப்பட்டது