பக்கம்:சூரப்புலி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தடவை தடியன் அவனே அங்கு அழைத்துச் சென்றிருந்த போது குரப்புலி கூடவே சென்றிருந்தது. அந்தத் தடவை குருடனுடைய முழங்காலில் பெரிய காயம் ஏற்பட்டிருந்தது. தடியன் குறும்புக் காகக் குருடனே, சாலேயில் குழிகள் நிறைந்த இடத்தின் வழியாக அழைத்துச் சென்ருன். குருடன் சிறு குழிகளில் கால் வைத்துத் தடுமாறுவதைப் பார்ப்பதிலே அவனுக்கு ஒரு மகிழ்ச்சி. பல தடவை குருடன் கால் இடறித் தடுமாறினன். அதைக் கண்டு சிறுவன் சத்தம் போடாமல் பல்லேக் காட்டி நகைத்துக்கொண்டே போனன். குருடன் வேருேர் ஆழமான குழியில் காலே வைக்கவே கையில் ஊன்றியிருந்த கோலேயும் மீறி அவன் கீழே விழுந்துவிட்டான். தரையிலே முழங்கால் வேகமாக மோதவே பெரிய காயம் எற்பட்டது. "எண்டா என்ன இப்படி வதைக்கிருப் ?’ என்று கிழவன் தன் காலப் பிடித்துக்கொண்டே கதறினன். அந்தக் காபத்திற்கு மருத்து போட்டுக் கட்டுவதற்காகத் தடியன் மருத்துவச்சாலைக்கு அழைத்துச் சென்ருன். இப்பொழுது காய்ச்சலுக்கு மருந்து வாங்க, சூரப்புலி அழைத்துச் சென்றது. ஆனல் அது மருத்துவசாலே என்று குருடனுக்கு எப்படித் தெரியும்? சூரப்புலி அங்கேயே நின்றதால் அந்த இடத்தைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ளக் குருடன் முயன்ருன் பக்கத்திலே சிலர் பேசிக்கொண்டே சென்ருர்கள். 'ஐயா இது என்ன இடம் ?' என்று குருடன் கேட்டான். அவன் நிலைமையை உணர்ந்த ஒருவர், இது ஆஸ்பத்திரி, என்ன வேண்டும்?' என்ருர், 'ஐயா புண்ணியவானே, எனக்குக் காப்ச்சல், மருந்துக்காக வந்தேன்' என்ருன் குருடன். அவர் உதவியால் மருந்து கிடைத்தது. குருடன் மருந்தைக் குடித்துவிட்டு மீண்டும் சத்திரத்தை அடைந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தடியன் அங்கே வந்தான். ஆல்ை, சூரப்புலி அவனக் குருடன் பக்கத்தில் வர அனுமதிக்கவில்லை. அது அவன் மேலே சீறிப் பாய்ந்து விரட்டியது. என்ன செய்தும் தடியன் மறு படியும் குருடனுக்குப் பக்கத்தில் வர முடியவேயில்லே. அன்று முதல் குருடனுக்கு வழிகாட்டியாகச் சூரப்புலி அமைந்தது. பிச்சை வாங்கத் தடியன் அழைத்துப்போன இடங்க ளெல்லாம் அதற்குத் தெரியும். மாலேயில் கடைத்தெருவிற்குப் போப் நிற்கவேண்டிய இடங்களும் தெரியும். அங்கெல்லாம் சூரப் புலி குருடனே அழைத்துச் சென்றது. நாப் வழிகாட்டி வருவதைக் கண்ட மக்கள் அதிகமான பரிவு காட்டினர்கள். வேடிக்கையாக நினைத்துக் காசு தந்தவர்களும் உண்டு. குருடன் வாழ்விலே ஒரு புதிய திருப்பம் எற்பட்டது. அவன் சூரப்புலிக்கு ஓர் அழகான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/57&oldid=840621" இலிருந்து மீள்விக்கப்பட்டது