பக்கம்:சூரப்புலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 தோல்பட்டை வாங்கிக் கழுத்திலணிந்தான். அந்தக் கழுத்துப் பட்டையில் மாட்டிய ஒரு நீண்ட தோல் நாடாவை அவன் பிடித்துக் கொள்ளுவான். இவ்வாறு அவன் பிச்சை எடுக்க வருவான். ஆறு மாதங்கள் ஓடி மறைந்துவிட்டன, குருடன் தன் வாழ்விலே இன்பத்தைக் கண்டான். சத்திரத்தைவிட்டு அவன் போத்தனூர்ச் சாலேயிலே வாளாங்குளத்திற்கு அருகிலிருந்த ஒரு பழமையான இடிந்த கோயிலுக்குத் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான். அங்கே வேறு யாரும் இல்லை. கையில் தினமும் நிறையப் பணம் மீதியாயிற்று. அந்தப் பணத்தை ஒரு பையிலே போட்டுக் கோயிலின் ஒரு மூலயிலே இருளடைந்த பகுதியிலே குழி தோண்டிப் புதைத்து வைத்தான். தினமும் அந்தப் பணமூட்டை பருத்துக்கொண்டே வந்தது. பணம் சேரச் சேரக் குருடன் அதைக் கையால் தொட்டுத் தொட்டுப் பார்த்து இன்பமடைந்தான். அப்படிப் பணம் சேரக் காரணமாயிருந்த சூரப்புலியின்மீது அதிக அன்பு காட்டினன். அதை 'மகனே' என்றுதான் அவன் கூப்பிடுவான். மகன் இருந்தால்கூட அவன் அவ்வளவு அன்பு காட்டியிருக்க மாட்டான். கோயில் மண்டபத்தில் படுத்து இரவிலே அவன் சூரப் புலியைக் கட்டியணத்துக்கொண்டு கொஞ்சுவான். தினமும் அதைக் குளிப்பாட்டுவான். எலும்புகளும், மாமிச உணவுகளுமாக அதற்கு வாங்கி வைப்பான். சூரப்புலியே அவனேக் கடைகளுக்கெல்லாம் அழைத்துச் செல்லும். தாயோடு விளையாடும் குட்டியைப் போலச் சூரப்புலி குருடைேடு விளேயாடும். மகனே என்று கூப்பிட்டால் எங்கிருந்தாலும் அது வேகமாக அவனிடத்திலே ஒடி அவன் மேலே பிரிபத்தோடு உராய்ந்துகொண்டிருக்கும். குருடைேடு ஒரே படுக்கையிற் படுத்துத் தூங்கும். அந்தக் கோயிலில் வேறு யாரும் இல்லாததால் அது அவர்களுக்குத் தனி வீடாயிற்று. சில இரவுகளில் குருடன் கோயில் மண்டபத்தில் படுத்து உறங்கிய பிறகு சூரப்புலி வெளியே வந்து வாளாங்குளத்துக் கரையிலே உலாவும். கானகத்திலே திரிந்துகொண்டிருந்த அதற்கு இவ்வாறு தனித்துத் திரிய வேண்டும் என்ற ஆசை அடிக்கடி உண்டாகும். அப்பொழுதெல்லாம் குளக்கரைக்கு வரும். இரவு வேண்களில் அங்கு பாரும் இருக்கமாட்டார்கள் பக்கத்திலுள்ள வயல் களிலிருந்து நரிகள் ஊளேயிடும் சத்தமும், ஏரியிலுள்ள தவளைகளின் கு லு ந் த ன் அங்குக் கேட்கும். அந்தப் பரந்த ஏரியின் கரையிலே ஒருவிதமான எ கா ந் த மி ரு ந் த து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/58&oldid=840622" இலிருந்து மீள்விக்கப்பட்டது