பக்கம்:சூரப்புலி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கானகத்திலே மரக்கூட்டங்களுக்கு இடையேயிருந்த எகாந்து ஒருவகை. பரந்த நீர்ப்பரப்பின் அமைதியிலே காணப்படும் எகர்ந்து ஒருவகை. இதையும் சூரப்புலி ஒரளவிற்கு விரும்பிற்று. அத்ளு அடிக்கடி இவ்வாறு வந்து எரிக்கரையிலும், வயல் வரப்புகளின் மீது உலாவும். வயல் எலிகளேயும் நண்டுகளையும் பிடித்துத் தின்னும். இவ்வாறு சூரப்புலி எரிக்கரையிலே திரிந்துகொண்டிருந்த 9 நாள் இரவு சமயம் பார்த்து நான்கு பேர் கோயிலுக்குள்ளே நுழைர் தார்கள். அங்கே மண்டபத்தில் படுத்துறங்கிக்கொண்டிருந்த குருடனே எழுப்பி, அவன் வைத்திருக்கும் பணத்தையெல்லாம் கொடுத்துவிடும்படி மிரட்டினர்கள். குருடன் தன்னிடம் பணம் இல்: என்று சொன்னன். நானே பிச்சைக்காரன். என்னிடம் பணம் எது?" என்று அவன் கூறினன். ஆனல் அவர்கள் அவனே விடுவதா இல்லை. பணம் இருப்பதை அறிந்தே அவர்கள் வந்திருந்தார்கள். உையிர் பிழைக்க வேண்டுமானல் பணமிருக்கிற இடத்தை சொல்லிவிடு' என்று ஒருவன் உறுமினன். குருடன் தன்னிடம் ஒன்றுமில்லையென்று வாதாடின்ை. அதே சமயத்தில் சூரப்புலியைக் கூப்பிடுவதற்காக 'மகனே' என்று சத்தம் போட்டான்.

நாயையா கூப்பிடுகிருப்?' என்று ஒருவன் சிறிஞன். திருடர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. ஒருவன் தான் கொண்டுவந்திருந்த குறுந்தடியால் குருடனுடைய மண்டையில் ஓங்கியடித்தான். குருடன் 'மகனே' என்று மறுபடியும் கூவிக் கொண்டு தரையில் விழுந்தான். அடி பலமாகப் பட்டுவிட்டதால் மண்டையிலிருந்து இரத்தம் பொங்கி வழித்தது. குருடன் உணர்வு கலங்கிற்று. அவன் அப்படியே கிடந்து உயிர் துறந்தான்.

இதற்குள்ளே சூரப்புலி பாய்ந்தோடி வந்துவிட்டது. தடியை ஓங்கும்போதே அப்படி ஓங்கியவன் யாரென்று வரும் வேகத்திலேயே கண்டுகொண்டது. மண்டபத்தில் பாய்ந்து துழைந்தது. நுழைந்ததும் அந்தக் கொலேகாரன்மீது ஆவேசத்தோடு பாய்ந்தது. அவன் குரல்வளையைக் கடித்து ஒரு கணத்திலே அவன் உயிரை வாங்கிவிட்டு மற்றவர்களின் மேல் பாயத் தொடங்கியது. அதனுடைய ஆவேசத்தைக் கண்டு மற்ற மூன்று பேரும் போத்தனூர்ச்சாலேயிலே ஓட்டம் பிடித்தார்கள். ஒருவனே அது கோயிலுக்குள்ளேயே மறித்து அவனுடைய மார்பில் பாய்ந்து கடித்தது. அவன் கீழே விழுந்தான். அவனுடைய தொடையைப் பிடித்துச் சதையைப் பிய்த்தெடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/59&oldid=840623" இலிருந்து மீள்விக்கப்பட்டது