பக்கம்:சூரப்புலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பகுதியிலே பாய்ந்திருந்த சட்டியைப் பிடுங்கி எறிந்தார். காயத்தில் வேகமாகப் பொங்கும் ரத்தத்தை மேலாடையைக்கொண்டு தடுத்தார். சட்டிக் காயத்தின்மேல் மேலாடையை அழுத்திப் பிடித்துக்கொண்டு வேருெருவருடைய உதவியையும் எதிர்பாராமல் சூரப்புலியைத் தூக்கினர். இதற்குள் காரை அருகே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இமாட்டார் ஒட்டியும் உதவிக்கு வந்தான். சூரப்புலியைக் காரில் எடுத்து வைத்ததும் காரை வேகமாக ஒட்டும்படி துறவி பணித்தார். கோயம்புத்தூரிலே செல்வர்கள் வாழும் ஒரு நாகரிகமான பகுதியில் உள்ள ஒரு மூன்றடுக்கு மாடி வீட்டிற்கு வந்து கார் நின்றது. சூரப்புலியின் சிகிச்சைக்கு வேண்டிய ஏற்பாடுகளைத் துறவி உடனே கவனித்தார். அந்த வீட்டின் சொந்தக்காரர் பயபக்தியோடு துறவியின் ஏவுதலச் செய்வதில் முனேந்தார். விலங்குகளுக்குச் சிகிச்சை செய்யும் சிறந்த வைத்தியர் ஒருவர் கொஞ்ச நேரத்திற் கெல்லாம் அங்கு வந்து சேர்ந்தார்: காயத்தைப் பரிசோதித்தார். நல்ல வேளையாக உணவுப் பையிலோ குடலிலோ காயம் ஏற்பட வில்லை. வயிற்றின் மேல் தோலும் தசைநார்களும் இரண்டங்குல அகலத்திற்குமேல் கிழிந்திருந்தன. விலா எலும்புகளில் கடைசி எலும்பை மூடியிருந்த சவ்வுப் பகுதியிலும் ஈட்டி பாய்ந்து மேலே பொத்துக்கொண்டு வந்திருந்தது. வைத்தியர் கிழிந்த பகுதிகளேயெல் லாம் தைத் மருந்து போட்டுக் கட்டினர். துறவி பக்கத்திலேயே இருந்து அக்கறையோடு கவனித்துக்கொண்டிருந்தார். எப்படி இதற்குக் காயம் ஏற்பட்டது ' என்று வைத்தியர் காயத்தைக் கட்டிவிட்டுக் கேட்டார். "எப்படி ஏற்பட்டதோ தெரியாது நான் பழனிக்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். வாளாங்குளத்திற்கு அருகிலே சாலேயின் நடுப்பகுதியிலே இது விழுந்து துடித்துக் கொண்டிருந்தது. வயிற்றிலே சட்டியொன்று பாய்ந்திருந்தது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும் ' என்ருர் துறவி. வைத்தியர் சிகிச்சை செய்துகொண்டிருக்கும் போதே துறவி போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். இரவிலேயே போலீஸார் அவர் குறிபபிட்ட பகுதிக்குச் சென்று சுற்றிலும் துருவிப் பார்த்தார் கள். பாழடைந்த கோயில் மண்டபத்திலே குருட்டுப் பிச்சைக் காரன் தலையிலே அடிபட்டு இறந்து கிடப்பதையும், நாயால் கடியுண்டு மற்ருெருவன் இறந்து கிடப்பதையும் அவர்கள் கண்டார்கள். மறுநாள் கோயம்புத்துார் நகரம் முழுவதும் குருட்டுப் பிச்சைக்காரன் கொலேயுண்டதைப்பற்றியே பேச்சாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/61&oldid=840626" இலிருந்து மீள்விக்கப்பட்டது