பக்கம்:சூரப்புலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 அவனே க் கொலே செய்வதற்கு என்ன காரணம் இருந்திருக்க முடியு மென்று எல்லோரும் ஆச்சரியமும் திகைப்பும் அடைந்தார்கள். அவனிடம் பணம் இருக்கிற விஷயமும், அதற்கு ஆசைப்பட்டுச் சில பேர் வந்ததும் அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது ? இதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டுமென்று மட்டும் மக்கள் பேசிக் கொண்டார்கள். சூரப்புலியின் விசுவாசத்தைப்பற்றியும், அது கொலே செய்தவனத் தாக்கிக் கொன்றதையும்பற்றிப் புகழாதவர் களே கிடையாது. இந்தக் கொலேயில் இன்னும் சிலர் சம்பந்தப் பட்டிருப்பார்கள் என்று எல்லோருக்கும் நிச்சயமாகத் தெரிந்தது. ஒருவனவது கொலேயுண்டவைேடு நிச்சயமாக வந்திருக்க வேண்டும். கொலேயுண்டவனே சூாப்புலியை ஈட்டியால் குத்தியிருந்தால் அவனேச் சூரப்புலி கொன்றிருக்க முடியாது. வேறு ஒருவன்தான் அதைக் குத்திவிட்டுத் தப்பி ஓடியிருக்க வேண்டும் என்பதும் வெளிப்படை பாக எல்லோருக்கும் தெரிந்தது. சூரப்புலிக்கு உதவி செய்ய எதிர் பாராது தோன்றிய துறவியைப்பற்றியும் மக்கள் பேசிக்கொண்டார் கள். அவருடைய ஆழ்ந்த பக்தியைப்பற்றியும் யோக சாதனே களப்பற்றியும் முன்பே பல பேருக்குத் தெரியும். அவரை ஒரு மகான் என்று பலர் போற்றித் தொழுவதுண்டு. அன்று காலேயிலிருந்து மக்கள் கூட்டங்கூட்டமாக அந்தப் பாழடைந்த கோயிலுக்கு வந்தார்கள். மேற்கொண்டு துப்புக் கண்டு பிடிப்பதற்காக அந்தப் பகுதியிலே மற்றவர்களின் காலடி படக் கூடாதென்று போலீஸார் ஏற்பாடு செய்திருந்தார்கள். யாரையும் அருகே விடாமல் தடுக்கப் பலர் அந்த இடத்தைச் சுற்றிலும் காவல் புரிந்தார்கள். கொலேக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட மற்றவர்களேயும் கண்டுபிடிக்கப் போலீஸார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்ருவது நாள் வரையிலும் போலீசாருடைய முயற்சி வெற்றி பெறவில்லே. இரண்டு நாட்களாக வேதனையோடு பாலோ கஞ்சியோ கூடக் குடிக்காமல் படுத்துக்கிடந்த சூரப்புலி மூன்ரும் நாளன்று மெதுவாக எழுந்து நடக்கலாயிற்று. அப்படி எழுந்து நடமாடுவதை வைத்தியர் விரும்பாவிட்டாலும் சூரப்புலியை அவரால் தடுக்க முடிய வில்லே. அதனுடைய உள்ளக் கருத்தையும் வேதனேயையும் நுட்ப மாக அறிந்துகொண்ட துறவி, அதை அதன் விருப்பம் போல விட்டு விடும்படி சொல்லிவிட்டார். எழுந்து நடப்பதற்குத் தயாராக இருந்த சூரப்புலியின் முன்னுல் ஒரு வட்டில் நிறையப் பால் வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/62&oldid=840627" இலிருந்து மீள்விக்கப்பட்டது