பக்கம்:சூரப்புலி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சூரப்புலி குனியமுத்துருக்கு அருகிலுள்ள ஒரு காட்டுக் குடிசையை நோக்கிச் சென்றது. அந்தக் குடிசையின் கதவு பூட்டப் பட்டிருந்தது. அங்கே யாரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. சூரப்புலி கதவின் முன்னுல் நின்று குரைத்தது. அதன் கருத்தை உணர்ந்த இன்ஸ்பெக்டர் பூட்டையுடைத்துத் திறக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். போலீஸார் உடனே அவர் உத்தரவை நிறை வேற்றினர்கள். சூரப்புலி முன்னல் குடிசைக்குள் நுழைந்தது. அங்கே இருளடைந்த ஒரு மூலையிலே ஒரு கட்டிலிலே ஒருவன் சுயநினைவு இல்லாமல் கிடந்தான். கோபத்தோடு சூரப்புலி அவனருகில் சென்றது. துறவி அதைத் தடுத்து நிறுத்திக்கொண் டார். கட்டிலில் கிடந்த மனிதனுடைய மார்பிலும் துடையிலும் சூரப்புலி கடித்த காயங்கள் தென்பட்டன. விலங்கு வைத்தியர் அவன் முகத்திலே தண்ணீரைத் தெளித்து, ஒருவாறு முதலுதவி செய்து அவனுக்குச் சுய நினைவு வருமாறு செய்தார். கண்களைத் திறந்து அவன் அச்சத்தோடு எல்லோரையும் பார்த்தான். சூரப்புலி யையும் போலீஸ்காரர்களேயும் பார்த்தவுடன் அவனுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அதே சமயத்தில் அவனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. "ஐயா! நான் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன். அந்தப் பாவிகள் இரண்டு பேரும் நான் சாகட்டுமென்று என்ன இங்கே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்,' என்று கூவினன். அவன் தன்னே ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்விடும்படி அவனத் தூக்கி வந்த மற்ற இருவரையும் கேட்டுக்கொண்டாம்ை. ஆல்ை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசென்ருல் விஷயம் வெளியாகிவிடுமென்று அவர்கள் அவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டார்கள். அந்தக் காட்டுக் குடிசைக்குக் கொண்டுவந்து ஏதோ பச்சைத்தழைகளை இடித்து வைத்துக் கட்டினர்கள். குறித்த கேரத்தில் உணவுகூடச் சரியாக அவனுக்குக் கொடுக்கவில்லை. இரவு நேரத்தில் மட்டும் அங்கு வந்து அவனே ஓரளவு கவனித்தார்கள். அதனுல் கடியுண்ட வனுக்கு அவர்கள் மேல் மிகுந்த கோபம். ஆகவே, அவன் விஷயத்தையெல்லாம் சொல்லிவிட்டான். மற்ற இருவர்களும் யாரென்றும் கூறிவிட்டான். போலீஸார் அவனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல எற்பாடு செய்தனர் மற்ற இருவரையும் சுலபமாகக் கைது செய்துகொண்டு வந்தார்கள். சூரப்புலியின் செயலே அறிந்து கோயம்புத்தூர் நகரம் முழுதும் அதையே புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தது. துறவி சூரப்புலியைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/65&oldid=840630" இலிருந்து மீள்விக்கப்பட்டது