பக்கம்:சூரப்புலி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 காரில் வைத்து மாடிவீட்டிற்குத் திரும்பக் கொண்டுவந்து சேர்த் சர். அங்கே வந்ததும் அன்போடு அதற்குப் பால் வைத்தார். இத தத் தடவை அது வால்க் குழைத்துக்கொண்டு நன்றியறிதலோடு பாலேக் குடித்தது. பதினேந்து நாள்கள் சென்றன. சூரப்புலி அனேகமாகக் குண மடைந்துவிட்டது. அதனுடைய உடற்சோர்வும் பெரிய அளவிற்கு நீங்கிவிட்டது. இந்தப் பதினேந்து நாள்களும் அது தினமும் அந்தப் பாழடைந்த கோயிலுக்குச் செல்ல விரும்பியதை உணர்ந்த துறவி, அதைக் காரில் வைத்து அங்கு அழைத்துச் சென்று வந்தார். ஒரு தடவை அவ்வாறு அதை அழைத்துச் சென்ற போது, சூரப்புலி ஒரு மூலயிலே கால்களால் பறித்து, அங்குப் புதைத்து வைக்கப்பட்டிருந்த பணப்பையை வாயினுல் கவ்வி எடுத்து வந்து, துறவியின் பாதங் களுக்கு அருகில் வைத்தது. இந்தப் பணப்பைதான் குருடனுடைய சாவுக்குக் காரணம் என்பதைத் துறவி அறிந்துகொண்டார். அதை வெறுப்போடு பார்த்தார். பிறகு அதை எடுத்துச்சென்று போலீஸாரிடம் ஒப்புவித்தார். சூரப்புலி அவருடைய செயல்க் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தது. சில நாள்களில் விசாரணை முடிந்தது. குருட்டுப் பிச்சைக் காரனேக் கொலே செய்தவனேடு சேர்ந்துகொண்டு திருட முயன்றதற் காக மூவருக்கும் சிறைத்தண்டனை கிடைத்தது. கொல் செய்தவ னுக்குத் தண்டனே முன்பே சூரப்புலியால் கிடைத்துவிட்டதல்லவா ? அதனுல் மற்றவர்கள் சிறைத்தண்டனையோடு தப்பினர்கள், விசாரணைக்குப் பிறகு போலீஸார் பணப்பையைத் திருப்பித் துறவி யிடம் கொடுத்தார்கள். கோயம்புத்தூரில் சுற்றிக்கொண்டிருந்த பிச்சைக்காரர்களேயெல்லாம் வரவழைத்து, அவர்களுக்கு அந்தப் பணத்தைத் துறவி பகிர்ந்து வழங்கினர். சூரப்புலி ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்துக்கொண்டிருந்தது. சூரப்புலிக்காகத் துறவி தமது பர்ணசால்க்குப் போவதை இருபத்தைந்து நாள்கள் தள்ளிவைத்தார். சூரப்புலி முற்றிலும் குணமடைந்துவிட்டது. விசாரணையும் முடிந்துவிட்டது. அதனல் துறவி நீலகிரி மலேச்சாரலுக்குப் புறப்பட்டார். போவதற்கு முன்பு, கோயில் மண்டபத்திற்குச் சூரப்புலியை அழைத்துச்செல்ல மறக்க வில்லே. அங்குச் செல்லும் பொழுதெல்லாம் சூாப்புலி வருத்தத்தோடு ஊளேயிட்டுக் கதறும். குருட்டுப் பிச்சைக்காரனுடைய அன்பை நினேந்து எங்கும். கடைசி முறையாக அது மண்டபத்திற்கு வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/66&oldid=840631" இலிருந்து மீள்விக்கப்பட்டது