பக்கம்:சூரப்புலி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பொழுது, இனிமேல் கோயம்புத்துரையே விட்டுப் போகப் போகிறதைக் குறிப்பாக உணர்ந்துகொண்டிருந்தது. அதனல் அன்று அதனுடைய எக்கம் மேலும் அதிகமாக இருந்தது. அன்று. மால் நீலகிரி மலேச்சாரலில் பர்ணசாலையைத் துறவி அடைந்த பொழுது அவர் அறிவித்திருந்தவாறு அவருடைய சிஷ்யர்க்ள் நான்கு பேரும் முன்னதாகவே வந்திருந்தார்கள். சூரப்புலி அங்கு வந்ததும் பர்ணசாலேக்குள் வேகமாகச் சென்று, அது மறைத்து வைத்திருந்த துறவியின் கைப்பையை எடுத்துக்கொண்டு வந்து அவர் முன்னுல் வைத்தது. அந்தப் பையைக் கண்டதும் துறவி தன்னைத் தேடிக்கொண்டு சூரப்புலி முன்பே அங்கு வந்திருந்ததையும், அருவியருகே சென்று அங்கு தாம் மறதியாக விட்டுச்சென்ற கைப் பையை எடுத்துவந்து பர்ணசாலேயில் வைத்ததையும் ஊகித்து அறிந்துகொண்டார். அப்படி அறிந்ததும் அன்போடு சூரப்புலியைத் தட்டிக்கொடுத்தார். அது குதூகலத்தோடு பலவாறு சப்தமிட்டுக் கொண்டே அவரைச் சுற்றிச்சுற்றித் துள்ளிக் குதித்துக்கொண் டிருந்தது. மறுபடியும் கானகத்து எகாந்தத்திற்கு வந்ததையும் துறவியை எதிர்பாராதவிதமாகக் கண்டுகொண்டதையும் அது நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. துறவியினுடைய பற்றற்ற அன்பிலே அது மெதுவாக வசப்படலாயிற்று. அவரிடத்திலே ஒரு தனிப்பட்ட சக்தி இருப்பதை அது விரைவில் உணர்ந்துகொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/67&oldid=1276977" இலிருந்து மீள்விக்கப்பட்டது