பக்கம்:சூரப்புலி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 சீடர்கள் தங்களுக்குள்ளே வகுத்துக்கொண்ட திட்டத்தின்படி ஆசிரமப் பணிகளைக் கவனித்தார்கள். குறிப்பிட்ட நேரங்களில் துறவி சீடர்களுக்குத் தத்துவங்களே விளக்குவார். பிறகு தனிமையில் அமர்ந்து உலகத்தையே மறந்து தியானம் செய்வார். சூரப்புலி அவருக்குப் பக்கத்திலே அமைதியோடு படுத்திருக்கும். இரவு நேரங்களிலே கானகத்திலே உலாவி வரும். இவ்வாறு மீண்டும் அதன் கானக வாழ்க்கை தொடங்கியது. முன்னல் அதன் கானக வாழ்க்கையிலிருந்து இது பல வகைகளில் வேறுபட்டது. முன்பு குகையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோரிடம் சேர்ந்து வாழ்ந்தது. அது ஒரு வகையான அனுபவம். அதை உண்மையான கானக வாழ்க்கையாகக் கொள்ள முடியாது. அந்தக் குகை காட்டிற்குள் இருந்ததைத் தவிரச் சூரப்புலிக்குக் காட்டோடு வேறு தொடர்பு அதிகமாக இல்ல. அந்த மனிதர்கள் பிடிபட்ட பின்புதான் அதற்கு உண்மை யான காட்டு வாழ்க்கை தொடங்கிற்று. காட்டின் கொடுமையும், வாழ்க்கைப் போராட்டமும் அப்பொழுது அதற்குத் தெரிந்தது. எந்தக் கணத்திலும் ஆபத்து நேரக்கூடிய வாழ்க்கையிலே எச்சரிக்கையோடும் தைரியத்தோடும் திறமையோடும் இருக்க அது பழகிக்கொண்டது. ஒவ்வொரு நாளும் தனது உணவுக்காக மற்ற விலங்குகளுடன் போராடவும் அது கற்றுக்கொண்டது. இப் பொழுது தொடங்குகின்ற கானக வாழ்க்கை அந்த வாழ்க்கையிலிருந்து மாறுபட்டது. உணவுக்காக அது அலேய வேண்டியதில்:ை போராட வேண்டியதில்லை. கானகத்திற்குள் நுழையாமல் ஆசிரமத்திற் குள்ளேயே வேண்டுமானலும் இருந்து அது வாழலாம். துறவியோ அவருடைய சிடர்களோ அதற்கு எவ்விதமான பணியும் இடவில்லை. ஆல்ை அது தானகவே பல பணிகளில் கலந்துகொண்டது. விறகு சேகரிக்கச் சீடர்கள் போகும்போது அது கூடவே செல்லும். ஆசிரமத் திலே பூஜை நடக்கும்போது சூரப்புலி கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும். இரவு நோங்களிலே துறவி சில சமயங்களில் நீண்ட நேரம் தம்மை மறந்து மரத்தடியிலும், வேறு இடங்களிலும் தியானத்தில் அமர்ந்திருப்பார். அப்பொழுதெல்லாம் சூரப்புலி எச்சரிக்கையோடு அவர் அருகில் படுத்துக்கொண்டிருக்கும். ஆசிரமத்திற்கு வந்த தொடக்கத்திலே சூரப்புலி பகல் நேரங் களில் வெகுநேரம் கானகத்திற்குள் புகுந்து சுற்றிவரும். அப்படிச் கு - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/68&oldid=840633" இலிருந்து மீள்விக்கப்பட்டது