பக்கம்:சூரப்புலி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கற்றும்போதே ஏதாவது பிராணிகளேப் பிடித்துக் கொன்று தின்னும். ஆனல் இரவு நேரங்களில் அது துறவியை விட்டுப் பிரிய விரும்பவில்லே. அப்படி விட்டுப் பிரிந்தால் அவருக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடும் என்று அது நினைத்திருக்கவேண்டும். குருட்டுப் பிச்சைக்காரனே அது இரவு நேரத்தில் பிரிந்து சென்றதாலேயே அவன் உயிரிழக்க நேரிட்டது என்று அது உணர்ந்திருந்தது. மீண்டும் அதே பிழையைச் செய்ய அது விரும்பவில்லை. பகல் வேளையில் இவ்வாறு கானகத்தில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு நாள் அது ஒரு கரடிக்குட்டியை வாயில் கவ்வி எடுத்துக்கொண்டு ஆசிரமத்திற்கு வந்துவிட்டது. கரடிக்குட்டி பிறந்து சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்குக் கண் திறவாமல் படுத்துக் கிடக்கும். அப்படிக் கண் திறவாத குட்டிதான் அது. மாலே நேரம் வெப்பமில்லாமல் குளிர்ச்சியாக இருந்ததால் தாய்க்கரடி தன் குட்டியைத் தனியாக விட்டுவிட்டு இரை தேடப் போயிருந்தது. அந்தச் சமயத்தில் மரக் கூட்டங்களுக்கிடையே புகுந்து உல்லாசமாகச் சுற்றிக்கொண்டு தற்செயலாக அங்கு வந்த சூரப்புலி கரடிக்குட்டியைக் கண்டு அதைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டது. அவ்வாறு அது செய்ததைத் துறவி ஆமோதிக்கவில்லே. குட்டியைக் கண்டதும் உடனே அதைத் திருப்பி எடுத்துப்போய் அது இருந்த இடத்திலேயே விட்டு வரும்படி அவர் சூரப்புலிக்கு உத்தரவிட்டார். துறவி கோபக்குறியொன்றும் காட்டா விட்டாலும் தன்செய்கை அவருக்குப் பிடிக்கவில்லே என்று சூரப்புலிக்குத் தெரிந்துவிட்டது. அது உடனே கரடிக்குட்டியை மீண்டும் வாயில் கவ்விக்கொண்டு திரும்பிப் போகத் தொடங்கிற்று. அந்தச் சமயத்தில் தாய்க்கரடியே அங்கு வந்துவிட்டது. கரடிக்குப் பொதுவாகவே கண்பார்வை சற்று மங்கல்; ஆனல் மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம். சூரப்புலி வந்த வழியை மோப்பம் பிடித்துக்கொண்டே பின்னலேயே தாய்க்கரடி வந்துவிட்டது. சூரப் புலியின் வாயில் கவ்வியிருந்த குட்டியைக் கண்டதும் அது கோபத் தோடு சீறிக்கொண்டு சூரப்புலியின் மேல் பாய்ந்தது. சூரப்புலி கரடிக்குட்டியைக் கீழே விட்டுவிட்டுப் போருக்குத் தயாராயிற்று. கரடி மிக வலிமையுடைய பிராணி. அதை எதிர்ப்பது சுலபமல்ல. அதிலும் தாய் க் க ச டி தன் குட்டிக்கு ஆபத்து என்று. கருதினால் மிகுந்த ஆவேசத்தோடும் மூர்க்கத்தோடும் சண்டை பிடும் : எதற்கும் அஞ்சாது. தனது வலிமையான முன்னங்காலினல் ஓங்கியடித்து எதிரியைக் கொன்றுவிடும். உரோமம் அடர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/69&oldid=840634" இலிருந்து மீள்விக்கப்பட்டது