பக்கம்:சூரப்புலி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இருக்குமாறு அது பழகலாயிற்று. துறவியின் ஒவ்வொரு செயலும் பார்வையும் அதற்குப் புதிய புதிய உண்மைகளேக் கூறுவதா அமைந்தன. ஆனல் துறவி அதற்காகத் தனி முயற்சி செய்ததாக: தெரியவில்லே. இயல்பாக அவர் எப்பொழுதும் போலவே நடந்து வந்தார். சூரப்புலிதான் அவருடைய நடத்தையிலே புதி) பொருளைக் கண்டது. சூரப்புலி கானகத்திலே தனியாக உலவும்போது பல தடவை களில் வேறு பிராணிகளைச் சந்திக்கும். ஆல்ை அவற்றைக் கொல்ல இப்பொழுது அது முயல்வதில்லே. ஒரு நாள் அது இரண்டு சிறுத்தைக்குட்டிகளே ஒரு புதர் மறைவிலே கண்டது. அவ்வாறு முன்பு கண்டிருந்தால் அவற்றை உடனே கொன்று தின்றிருக்கும். ஆனல் இன்று அப்படிச் செய்யவில்லை. அந்தக் குட்டிகளோடு நெடு நேரம் விளையாடிக்கொண்டிருந்தது. அப்படி விளையாடிக்கொண் டிருக்கும் சமயத்தில் இரை தேடச் சென்றிருந்த தாய்ச் சிறுத்தை திரும்பி வந்துவிட்டது. அது கோபத்தோடு சீறிக்கொண்டு சூரம் புலியைப் பார்த்தது. ஆனல் மறுகணத்தில் அதன் கோபம் மறைந்து விட்டது. தன் வருகையையும் கவனியாமல் குட்டிகள் அதைேடு உற்சாகமாக விளையாடிக்கொண்டிருப்பதை அறிந்த தாய் தனது சீற்றத்தை மாற்றிக்கொண்டு மெதுவாக அருகே வந்தது அப்பொழுது சூரப்புலி தரையில் படுத்துக் கிடந்தது. சிறுத்தைக் குட்டிகள் அதன் மார்பிலேறிக் குதித்துக்கொண்டிருந்தன. நாயும் குட்டிகளும் மகிழ்ச்சியோடு பல வகையாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. பிறகுதான் அவை தாய்ச் சிறுத்தையைக் கவனித்தன. குட்டிகள் அதனருகே துள்ளியோடின. சூரப்புலி மகிழ்ச்சியோடு ஆசிரமத்திற்குத் திரும்பியது. இவ்வாறு சூரப்புலியினிடத்தில் மாறுதல் ஏ ற் பட் டு க் கொண்டிருந்த நாள்களில் ஆசிரமத்திற்குப் பலர் வருவதும் போவது மாக் இருந்தார்கள். துறவி எங்கோ புறப்படுவதற்கு ஆயத்தம் செய்வதுபோலத் தோன்றியது. மக்கள் அன்போடு காணிக்கையாக அவருக்கு நிறையப் பொருள் கொடுக்க முன்வந்தார்கள். ஆனல் அவர்கள் கொடுக்கும் பொருள்களே அவர் சிறிதும் விரும்பவில்லை. அன்பின் அறிகுறியாக வழக்கம்போல ஒரு சிறு நாணயத்தை ஒவ்வொருவரிடமிருந்தும் ஏற்றுக்கொள்வார். தன்ன விட்டுப் பிரிந்து போய்விடுவாரோ என்ற எக்கம் சூரப்புலியின் மனத்தில் மீண்டுத் தோன்றியது. ஆல்ை அந்த ஏக்கம் நீடிக்குமாறு துறவி விடவில்லே. ஒருநாள் அதிகாலேயிலே துறவி பிரயாணத்திற்குத் தயாரானர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/75&oldid=840641" இலிருந்து மீள்விக்கப்பட்டது