பக்கம்:சூரப்புலி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 சூரப்புலியையும் கூடவே அழைத்துச் சென்ருர். சீடர்களும் ஆசிர மத்தைக் காலி செய்துவிட்டுப் புறப்பட்டனர். கானகத்திற்கு, வெளியே மேட்டுப்பாளையம் சேரும் சாலேயிலே ஒரு மோட்டார் கார் தயாராக வந்து நின்றது. துறவியும் சீடர்களும் சூரப்புலியும்: கோயம்புத்துரருக்குக் காரில் சென்றனர். கோயம்புத்துருக்கு வந்ததும் சூரப்புலியை வாளாங்குளத்திற்கு அருகிலிருக்கும் பாழடைந்த கோயிலுக்குக் கூட்டிச் செல்லத் துறவி மறக்கவில்லை. ஆனால், இந்தத் தடவை சூரப்புலியின் நடத்தையில் வேறுபாடிருந்தது. குருட்டுப்பிச்சைக்காரனே நினைத்து அது வருந்திய தென்ருலும் முன்போல ஊளேயிட்டுக் கதறவில்லே. அந்த இடத்திலே சிறிது நேரம் நின்றுவிட்டுத் துறவியிடம் ஓடிவந்துவிட்டது. நீங்கள் தாமே இப்பொழுது எனக்கு எல்லாம்” என்று அது துறவியைப் பார்த்துச் சொல்லுவதுபோல் பார்த்தது. துறவி அதன் உள்ளத்தைத் தெரிந்துகொண்டவர்போலக் காணப்பட்டார். அன்று மாலேயே அவர் நீலகிரி எக்ஸ்பிரஸில் சென்னேக்குப் பயணமானர். சீடர்கள் நால்வரும் மாலேவரையில் கூடவே இருந்து விட்டுப் பிறகு அவருடைய பாதத்தில் விழுந்து வணங்கி விடை பெற்றுக்கொண்டார்கள். துறவியைப் பிரிகின்ற வருத்தம் அவர்க ளுடைய முகத்திலே தெளிவாகத் தெரிந்தது. துறவி நீண்ட நாள்களுக்கு அவர்களேயெல்லாம் விட்டுப் பிரிகின்ருர் என்பது சூரப் புலிக்கு நன்ருகத் தெரிந்துவிட்டது. தன்னேயும் கோயம்புத்துகில் அந்தப் பெரிய மூன்றடுக்கு மாடி வீட்டிலேயே விட்டுச் சென்று விடுவாரோ என்று அதற்கும் பயம் உண்டாயிற்று. அதல்ை அது துறவியை விட்டுச் சிறிது நேரமும் பிரியாமல் காலடியிலேயே இருந்தது. பல பேர் துறவியைக் கண்டு வணங்க வந்தார்கள் ஒவ்வொரு வரும் காணிக்கை சமர்ப்பிக்கத் தவறவில்லை. துறவி வழக்கப்படி ஒரு சிறு நாணயத்தை ஒவ்வொருவரிடமிருந்து எற்றுக் கொண்டார். இந்த நீண்ட பிரயாணச் செலவுக்காவதும் கொஞ்சம் அதிகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று சிலர் பணிவோடு கேட்டுக்கொண்டார்கள். "எனக்கு எதற்குப் பணம்? கயிலாசபதி இருக்கிருர். அவர் இருக்கும்போது எனக்கு என்ன குறைச்சல்?’’ என்று சிரிப்போடு கூறிவிட்டு அவர் அவர்கள் கொடுத்த பொருளே வாங்க மறுத்துவிட்டார். மாலேயில் ரயில் நிலயத்திலே சூரப்புலி பெரிய அதிர்ச்சி படைந்தது. அதைத் துறவியிடமிருந்து பிரித்துத் தனியாக ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/76&oldid=840642" இலிருந்து மீள்விக்கப்பட்டது