பக்கம்:சூரப்புலி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பெட்டியில் விட முயன்ருர்கள். நாய்களே ஏற்றிச் செல்லும் ரயில் பெட்டி அது. துறவி பிரயாணம் செய்யும் பெட்டியில் அதை ஏற்றிச் செல்ல இயலாதாகையால் இந்த ஏற்பாடு செய்தார்கள். ஆனல் சூரப்புலி அந்தப் பெட்டிக்குள் செல்ல அறவே மறுத்துவிட்டது. துறவி யிடமிருந்து தன்னப் பிரித்து எங்கோ கொண்டுபோக நினக்கிருர்கள் என்று அது பயந்தது. துறவி அதன் பயத்தை உணர்ந்துகொண் டார். மெதுவாக அதைத் தட்டிக்கொடுத்தார். 'வா, இதில் ஏறிக் கொள். பயப்படாதே' என்று அவர் கூறிக்கொண்டே நாய் வண்டிக்குள் தாம் முதலில் ஏறினர். சூரப்புலியின் பயம் நீங்கிவிட்டது. உடனே உள்ளே சென்று படுத்தது. இங்கே இரு. காலையில் வந்து உன்னேக் கூட்டிச்செல்கிறேன்” என்று சொல்லி மீண்டும் ஒரு முறை தட்டிக் கொடுத்துவிட்டுத் துறவி கீழே இறங்கினர். சூரப்புலி மகிழ்ச்சியோடு பெட்டியில் தங்கிற்று. பிறகுதான் அந்தப் பெட்டியை அது ஆராய்ந்து பார்த்தது. தங்குவதற்கு வசதியாகத்தான் இருந்ததென்ருலும் அந்த மாதிரி பெட்டிக்குள் அடைபட்டு இரவைக் கழிப்பது அதற்கு ஒரு புதிய அனுபவம். மேலும் ரயில் கடகடவென்று பலவகையாக இரைச்சல் இட்டுக்கொண்டும் ஆடிக்கொண்டும் சென்றது. அந்த நிலையில் துரங்குவதும் அதற்கு ஒரு புதிய அனுபவம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/77&oldid=1276971" இலிருந்து மீள்விக்கப்பட்டது